சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது; காமமோ பெரிதே!’1
இஃது எல்லா அடியும் ஒத்துச் சிறப்புடை நேர்த்தளையான் வந்த
நிலைமண்டில ஆசிரியப்பா.
‘பானலொடு கமழும் கானலந் தண்கழி
முத்துகுத் தன்ன1 கொத்துதிர் புன்னைக்
கொடுஞ்சினை நெடுங்கோட் டிருந்தபார்ப் பிற்குக்
குண்டுறை அன்னம் மீன்கவர்ந்து கொடுக்கும்
தண்டுறை ஊரன் தக்கானெனல்? கொடிதே’.
இது சிறப்பில் வஞ்சித்தளை ஒன்றி வந்த நிலைமண்டில ஆசிரியப்பா.
இவை எல்லா அடியும் ஒத்து நின்றவாறே நின்று இற்றன. பிற
தளையானும் வந்தவாறு கண்டு கொள்க.
‘கோண்மாக் கொட்குமென் றஞ்சுவல் ஒன்னார்க்
கிருவிசும்பு கொடுக்கும் நெடுவேல் வானவன்
ஆடமை மென்றோள் நசைஇய நாடொறும்
கூடல் அன்ன குறுந்தொடி அரிவை
வடிநுனை எஃகம் வலவயின் ஏந்திக்
கைபோற் காந்தட் கடிமலர் அவிழும்
மைதோய் சிலம்பன் நள்ளிருள் வருவிடம்’.
இது மகரம் ஈறாய் வந்த நிலைமண்டிலம்.
உதயணன் கதையும் கலியாண கதையும் ‘என்’ என்னும் அசைச்
சொல்லால் இற்ற நிலைமண்டிலம்.
‘ஆற்றுச் செலவும் அளைமறி நாகமும்
தாப்பிசைத் தளையும் தனிநிலைப் பெய்தியோ
டேற்கும் பொருள்கோள் இவையாம் எனலான்’.
இது னகரம் ஈறாய் வந்த நூற்பா நிலைமண்டிலம்.
பிறவும் வந்துழிக் காண்க. என்னை?
‘ஒத்த அடித்தாய் உலையா மண்டிலம்
என்னென் கிளவியை ஈறா கப்பெறும்;
அன்ன பிறவுமந் நிலைமண் டிலமே’.
என்றார் அவிநயனார்.
1 குறுந். 18 யா. வி. 53 உரைமேற்
பி - ம். 1 முத்துக் கன்ன ? தகானெனல் நசைஇ
|