பக்கம் எண் :
 

 292                                   யாப்பருங்கல விருத்தி

     ‘ஒத்த அடியின நிலைமண் டிலமே’.
     ‘என்னெனும் அசைச்சொலும் பிறவும் ஒன்றித்
     துன்னப1 பெறூஉம் நிலைமண் டிலமே;
     என்னென் றிறுதல் வரைதல்? இன்றே’
     ‘அல்லா ஒற்றினும் அதனினாம்5 இறுதி
     நில்லா அல்ல; நிற்பன வரையார்’.

 என்றார் மயேச்சுரர்.

[நேரிசை வெண்பா]

     ‘நான்கு முதலாக நாலைந் தெழுத்தளவும்
     ஆன்ற அகவல் அடிக்கெழுத்தாம்;- மூன்றுடைய
     பத்தாதி யாகப் பதிற்றிரட்டி ஈறாக
     வைத்தார் முரற்கைக் கெழுத்து’.1

     ‘எல்லா நிலமும் அடிப்படுத் தீரிரண்டு
     நல்லா கமப்பொருளை நண்ணுதலால் - பல்லோர்க்கும்
     சீரா சீரியத்தைத் தேர்வேந்தன் என்றுரைத்தார்
     பேரா சிரியர் பெயர்’.

 இவற்றை விரித்து உரைத்துக் கொள்க.

75) ஆசிரியத் தாழிசை

     ‘மூன்றடி ஒத்த முடிபின ஆய்விடின்
     ஆன்ற அகவற் றாழிசை ஆகும்’.

     ‘இஃது என் நுதலிற்றோ?’ எனின் ஆசிரியப்பா உணர்த்தி இனம் உணர்த்துவான் எடுத்துக் கொண்டார்; அவற்றுள் இச் சூத்திரம் தாழிசை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     இதன் பொருள் : மூன்று அடி ஒத்த முடிபின ஆய்விடின் - அடி மூன்றாய்த் தம்முள் அளவொத்து இறுவனவாயின், ஆன்ற அகவல் தாழிசை ஆகும் (அவை) அமைந்த ஆசிரியத் தாழிசையும் ஆசிரிய ஒத்தாழிசையும் ஆம் (என்றவாறு).

     சீர் வரையறை இன்மையின், எனைத்துச் சீரானும் அடியாய் வரப் பெறும்.


  யா. வி. 86 உரைமேற்.
  பி - ம். 1 துன்னரும் 5 வரைநிலை ? அதனினும்