‘ஆன்ற’ என்று மிகுத்துச் சொல்லிய அதனால், ஒரு பொருண்மேல்
மூன்று அடுக்கி வருவது சிறப்புடைத்து. என்னை?
‘ஒத்த ஒருபொருள் மூவடி முடியினஃ
தொத்தா ழிசையாம் உடன்மூன் றடுக்கின்’
என்றார் மயேச்சுரர்.
அவ்வாறே ஒரு பொருண்மேல் மூன்று அடுக்கி வருவன ஆசிரிய
ஒத்தாழிசை என்றும், ஒரு பொருண்மேல் ஒன்றாயும் இரண்டாயும்
மூன்று அடுக்கிப் பொருள் வேறாயும், மூன்றின் மிக்கவும் ஆசிரியத்
தாழிசை என்றும் விகற்பித்துக் கூறுவர் ஒருசார் ஆசிரியர்.
வரலாறு :
[ஆசிரிய ஒத்தாழிசை]
‘சாருண் ஆடைச் சாய்கோல் இடையன்
நேர்கொள் முல்லை நெற்றி வேய
வாரார் வாரார் எற்றே எல்லே! 1
‘அத்துண் ஆடை ஆய்கோல் இடையன்
நற்கார் முல்லை நெற்றி வேய
வாரார் வாரார் எற்றே எல்லே!
‘துவருண் ஆடைச் சாய்கோல் இடையன்
கவர்கான் முல்லை நெற்றி வேய
வாரார் வாரார் எற்றே எல்லே!
இவை ஒரு பொருண்மேல் மூன்று அடுக்கி, நாற்சீர் அடியான் சிறப்புடை
ஆசிரிய நேர்த்தளையான் வந்த ஆசிரிய ஒத்தாழிசை.
‘கன்று குணிலாக் கனியுகுத்த மாயவன்
இன்றுநம் மானுள் வருமேல் அவன்வாயில்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ!
‘பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன்
ஈங்குநம் மானுள் வருமேல் அவன்வாயில்
ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ!
‘கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன்
எல்லைநம் மானுற் வருமேல் அவன்வாயில்
முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ!’1
ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ!
1. சிலப். 17: 1-3பி - ம்.1 வாரான் வாரான் ? கவர்கார்
|