இவை இயற்சீர்ச் சிறப்புடை வெண்டளையான் வந்த ஆசிரிய ஒத்தாழிசை.
[ஆசிரியத் தாழிசை]
‘நீடற்க வினையென்று நெஞ்சின் உள்ளி
நிறைமலரஞ் சாந்தமொடு புகையும் நீவி
வீடற்குந1 தன்மையினான் விரைந்து சென்று
விண்ணோடு மண்ணினிடை நண்ணும் பெற்றி
பாடற்கும் பணிதற்கும் தக்க தொல்சீர்ப்
பகவன்றன் அடியிணையைப் பயிறும்? நாமே’.
இஃது ஒரு பொருண்மேல் ஒன்றாய், எண்சீர்க் கழிநெடிலடியாற்
சிறப்புடைக் கலித்தளையான் வந்த ஆசிரியத் தாழிசை.
‘வானுற நிமிர்ந்தனை வையகம் அளந்தனை
பான்மதி விடுத்தனை பல்லுயிர் ஓம்பினை
நீனிற வண்ணநின் நிரைகழல் தொழுதனம்’.
இது சிறப்புடை ஆசிரியத் தளையான் வந்த ஆசிரியத் தாழிசை.
இனி, ஒரு பொருண்மேல் இரண்டாகியும், மூன்றாகிப் பொருள்
வேறாகியும், அதின் மிக்கனவும் வந்தவழிக் காண்க.
‘ஆசிரியத் தாழிசை’ எனினும், ‘ஆசிரிய ஒத்தாழிசை’ எனினும்
இழுக்காது. என்னை?
‘அடிமூன் றொத்திறின் ஒத்தா ழிசையே’.
என்றார் சிறுகாக்கைபாடினியார்.
76) ஆசிரியத் துறை
கடையதன் அயலடி கடைதபு நடையவும்
நடுவடி மடக்காய் நான்கடி யாகி
இடையிடைகுறைநவும் அகவற் றுறையே’.
‘இஃது என் நுதலிற்றோ?’ எனின் ஆசிரியத் துறை ஆமாறு
உணர்த்துதல் நுதலிற்று.
பி - ம். ? வீடறத்த 1பற்று ? இடையடி
|