இதன் பொழிப்பு : ஈற்றயல் அடி குறைந்து நான்கடியாய் வருவனவும்,
ஈற்றயல் அடி குறைந்து இடையந்தத்து அடி மடக்காய் நான்கடியாய்
வருவனவும், இடையடி குறைந்து நான்கடியாய் வருவனவும், இடையிடை
குறைந்து இடை மடக்காய் நான்கடியாய் வருவனவும் ஆசிரியத் துறையாம்
(என்றவாறு).
‘நடுவடி மடக்காய்’ என்பதனை ஒருகால் இருதலையும் கூட்டி
‘நான்கடி’ என்பதனை எல்லாவற்றோடும் கூட்டி, மத்திம தீபமாக உரைக்க.
சீர் வரையறை இன்மையின், எனைத்துச் சீரானும் அடியாய் வரப்
பெறும்.
‘நடையவும்’ என்ற மிகையான், முதல் அயலடி குறைந்தும், நடு ஈரடி
குறைந்தும் மிக்கும் வருவனவும் ஆசிரியத் துறையாம். அல்லது, ஓரடி
குறைந்து வருவன ‘ஆசிரிய நேர்த்துறை’யும் ஈரடி குறைந்து வருவன
‘ஆசிரிய இணைக் குறட்டுறை’யும் எனப்படும்.
வரலாறு:
[ஆசிரிய நேர்த்துறை]
‘கரைபொரு கான்யாற்றங் கல்லதர் எம்முள்ளி வருதி ராயின்
அரையிருள் யாமத் தடுபுலி யேறஞ்சி 1 அகன்றுபோக
நரையுறு மேறுநுங்கை வேலஞ்சும் நும்மை
வரையர மங்கையர் வவ்வுதல் அஞ்சுதும் வாரலையோ!’.1
எனவும்,
‘வானகச் சோலை வரையதர் எம்முள்ளி வருதியாயின்
யானைகண் டார்க்கும் அரியேறு£ நும்மஞ்சி அகன்றுபோக
யானையோ நுங்கைமேல் அஞ்சுக நும்மை
வானர மகளிர் வவ்வுதல் அஞ்சுதும் வாரலையோ!’
எனவும், இவை ஈற்றயல் அடி குறைந்து, ஈயற்சீர்ச் சிறப்புடை
வெண்டளையானும், சிறப்பில் வெண்டளையானும் வந்த ஆசிரிய
நேர்த்துறை.
‘வண்டுளர் பூந்தார் வளங்கெழு செம்பூட்சேய் வடிவே போலத்
தண்டளிர்ப் பிண்டித் தழையேந்தி மாவினவித்
தணந்தோன் யாரே?
1. தொல். பொ. 376 உரைமேற்.
பி - ம். 1 அடுபுலியோ நும்மஞ்சி நரையுருமே றுங்கை வேலஞ்சுக
|