தண்டளிர்ப் பிண்டித் தழையேந்தி வந்துநம்
பண்டைப் பதிவினவிப் பாங்கு படமொழிந்து படர்ந்தோ னன்றே?’
எனவும்,
‘கண்ணியோர் கண்ணி1 வலத்தசைத்த காரி
கமழ்தண்டார் காமம் புனைபவோ காரி?
பண்ணியோர் பாடல் எழப்பண்ணி காரி
பணைமுழவின? சீர்தயங்கப் பாடானோ காரி?
சீர்தயங்கத் தார்தயங்கச் செய்யாத செய்திவண்5
நீர்தயங்கு கண்ணினளாய் நிற்கவோ காரி?
நினக்கினியார்க் கெல்லாம் இனையையோ காரி?’
எனவும் இவை ஈற்றயலடி குறைந்து, இடை மடக்காய், நான்கடியாய்,
வெண்டளையான் வந்த ஆசிரிய நேர்த்துறை.
‘கொன்றார்ந் தமைந்த ... கற்பன்றே’.1
இது முதலடியும் மூன்றாம் அடியும் பதினான்கு சீராய், ஏனையடி இரண்டும்
பதினாறு சீராய், இடையிடை குறைந்து வந்த ஆசிரிய இணைக்குறட்டுறை.
‘இரங்கு குயின்முழவா இன்னிசையாழ் தேனா
அரங்கம் அணிபொழிலா ஆடும் போலும் இளவேனில்!
அரங்கம் அணிபொழிலா ஆடு மாயின்
மரங்கொல் மணந்தகன்றார் நெஞ்சமென் செய்த திள்வேனில்’.
எனவும்,
‘போதுறு முக்குடைப் பொன்னெயில் ஒருவன்
தாதுறு தாமரை அடியிணை பணிந்தார்
தாதுறு தாமரை அடியிணை பணிந்தார்
தீதுறு தீவினை இலரே’.
எனவும் இவை இடையிடை குறைந்து இடை மடக்காய், நான்கடியாய் வந்த
ஆசிரிய இணைக்குறட்டுறை.
[ஆசிரிய நேர்த்துறை]
‘வரிகொள் அரவும் மதியும் சுழலக்
கரிகால் ஏந்தி ஆடுமே;
கரிகால் ஏந்தி ஆடு மிறைவன்,
புரிபுன் சடைமேற் புனலும் பிறழவே’. 3
1. யா. வி. 16, 25 உரைமேற்.
பி - ம். 1 கண்ணே ? பணைமுழவம் 5 செய்தவள் 1 யா. வி. பக் 218.
2 யா. வி. 3 பிறழ்வே
|