பக்கம் எண் :
 

 செய்யுள் இயல்                                         297

     இது முதல் அயலடி ஒரு சீர் குறைந்து, ஏனை மூன்றும் நாற்சீர் அடியாய், இடை மடக்காய் வந்த ஆசிரிய நேர்த்துறை.

[ஆசிரிய இணைக்குறட்டுறை]

     ‘பாடகஞ்சேர் காலொருபாற் பைம்பொற் கனைகழற்கால
        ஒருபால் தோன்றும்;      
     நீடு குழலொருபால் நீண்ட சடையொருபால்
     வீடிய மானின் அதளொருபால் மேகலைசேர்ந
     
     தாடும் துகிலொருபால் அவ்வுருவம் ஆண்பெண்ணென
        றறிவார் யாரோ’.

 இது நடு இரு சீர் குறைந்து, ஏனையடி இரண்டும் ஆறு  சீரான் வந்த
ஆசிரிய இணைக் குறட்டுறை.

[ஆசிரியத் துறை]

     
     ‘கோடல் விண்டு கோபம் ஊர்ந்த கொல்லைவாய்
     மாடு நின்ற கொன்றை ஏறி மௌவல் பூத்த பாங்கெலாம்
     ஆடல் மஞ்ஞை அன்ன சாயல் அஞ்சொல் வஞ்சி மாதராய்!
     வாடல்; மைந்தர் தேரும் வந்து தோன்றுமே’.

 இது நடு ஈரடியும் மிக்கு வந்த ஆசிரியத் துறை.

     பிறவும் வந்தவழிக் காண்க.

     மடக்கு மூவகை: அடி மடக்கும், சீர் மடக்கும், அசை மடக்கும் என.
 என்னை?

    
     ‘இரண்டாம் அடியை இனிதின் மடக்கலும்,
     இரண்டாம் அடியின் இறுதிச்சீர் மடக்கலும்,
     இரண்டாம் அடியின் ஈற்றசை மடக்கலும்
     இவ்வா றென்ப மடக்குதல் தானே’.

 என்றாராகலின்.

     வரலாறு :

     ‘வண்டுளர் பூந்தார்’1 எனவும், ‘இரண்டு குயின்முழவா’2

 எனவும் இவை அடி மடக்கு.

 

     ‘கண்ணியோர் கண்ணி’ என்பது சீர் மடக்கு.


  1. யா. வி. பக் 218. 2. யா. வி