பக்கம் எண் :
 

 298                                   யாப்பருங்கல விருத்தி

[ஆசிரிய நேர்த்துறை]

     ‘முத்தரும்பிப் பைம்பொன் மலர்ந்து முருகுயிர்த்துத்
     தொத்தலரும் கானற் றுறையேம்1
     துறைவழி வந்தெனது தொன்னலனும் நாணு
     நிறைவளையும் வௌவி நினையானச்? சேர்ப்பன்’.

 இஃது அசை இடை மடக்கு.

     பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க. என்னை?

     ‘அடித்தொகை நான்குபெற் றந்தத் தொடைமேற்
     கிடப்பது நாற்சீர்க் கிழமைய தாகி
     எடுத்துரை பெற்ற இருநெடில் ஈற்றின்
     அடிப்பெறின் ஆசிரி யத்துறை ஆகும்’.
     
     ‘அளவடி ‘ஐஞ்சீர் நெடிலடி தம்முள்
     உறழத் தோன்றி ஒத்த தொடையாய்
     விளைவதும் அப்பெயர் வேண்டப் படுமே’.

என்றார் காக்கைபாடினியார்.

     ‘எண்சீர் அடியீற் றயலடி குறைநவும்
     ஐஞ்சீர் அடியினும் பிறவினும் இடையொன்ற
     அந்தத் தொடையாய் அடிநான் காகி
     உறழக் குறைநவும் துறையெனப் படுமே’.

 

 என்றார் மயேச்சுரர்.

     ‘நாற்சீர் அடிநான் கந்தத்தொடை நடந்தவும
     ஐஞ்சீர் அடிநடத் துறழவடி5 குறைந்தவும்
     அறுசீர் எழுசீர் அவ்வியல் நடந்தவும்
     எண்சீர் நாலடி யீற்றயல்4 குறைந்தும்
     தன்சீர்ப் பாதியின் அடிமுடி வுடைத்தாய்
     அந்தத் தொடையின் அவ்வடி11 நடப்பிற்
     குறையா உறுப்பினது துறையெனப் படுமே’.

 என்றார் அவிநயனார்.

77) ஆசிரிய விருத்தம்

     ‘கழிநெடில் அடிநான் கொத்திறின் விருத்தமஃ
     தழியா மரபின தகவல் ஆகும்’.


  1 இஃது ஈரடி ஓரெதுகைச் செய்யுள்.  பி - ம். 1 துறையெம் ? நினையானஞ் 5 துறழடி திவலிய 4 ஈற்றடி
  தொடையிவை 11 அடியா.