பக்கம் எண் :
 

 300                                   யாப்பருங்கல விருத்தி

     புறப்பா அகவலாவன, பாடாண்டுறை மேற்பாடும் ஆசிரியம் எனக் கொள்க. என்னை?

     புறப்பா அகவல் பொருந் தக்கூறிற்
     பாடான் பகுதி நடுங்க காலை

 என்றார் ஆகலின்

     நூற்பா ஆகவலாவன, விழுமிய பொருளைத் தழுவிய     சூத்திரமாய் வருவன என்னை.

     ‘நூற்பா அகவல் நுணங்க நாடின்
     சூத்திரம் குறித்த1 யாப்பின வாகி
     இசைவரம் பின்றி விழுமிதின் நடக்கும்’ ?

 என்றாராகலின்.

     ‘சித்திர அகவல் என்பது, சீர்தொறும் அகவி வருவது. என்னை?
     ‘சித்திர அகவல்,
     சீர்தொறும் அகவும் சித்திரம் உடைத்தே’.

 என்றாராகலின்.

     உறுப்பின் அகவலாவது, ஒரு பொருண்மேற் பரந்திசைப்பது. என்னை?

     ‘உறுப்பின் அகவல் ஒருபொருள் நுதலி
     இசைபரந் தியலும் இயற்கைத் தென்ப’.

 என்றாராகலின்.

     ஏந்திசை அகவல் என்பது, எழுத்திறந்து இசைப்பது. என்னை?
     ‘ஏந்திசை அகவல் எழுத்திறந் திசைக்கும்
     பாங்கறிந் துணர்ந்தோர் பகருங் காலை’.

 என்றாராகலின்.

 அல்லதூஉம், ‘அஃது’ என விகற்பித்த அதனால், அடிமறியாய் வருவனவற்றை ஆசிரிய மண்டில விருத்தம் என்றும், அடிமறியாகாது நிற்பனவற்றை ஆசிரிய நிலை விருத்தம் என்றும் வழங்குவர் ஒருசார் ஆசிரியர் எனக் கொள்க.

     வரலாறு :

[அறுசீர் ஆசிரிய விருத்தம்]

    ‘விடஞ்சூழ் அரவின் இடைநுடங்க விறல்வாள்5 வீசி விரையார்வேங்
     கடஞ்சூழ் நாடன் காளிங்கன்£ கதிர்வேல் பாடும் மாதங்கி


  பி - ம். 1 வகுத்த ? விழுமியது பயக்கும். 5 மினல்வாள் காளிம்பன்