மடஞ்சேர் நோக்கம் மாதாந்தாம்1 வடிக்கண் நீல மலர்தாந்தாம்
தடந்தோள் இரண்டும் வேய்தாந்தாம் என்னும் தன்னகத்? தண்ணுமையே’.
இஃது அறுசீர்ச் சிறப்புடைக் கழிநெடிலடியான் வந்த ஆசிரிய விருத்தம்.
[எழுசீர் ஆசிரிய விருத்தம்]
‘படையொன்றும் இல்லை அணியில்லை சுற்ற
மதுவில்லை பற்றும் இனியொன்
றடைகின்ற தில்லை அமிழ்துண்ப5 தில்லை
அறிவொன்றும்3 எண்ணி அறியார்
புடைநின்று நான்ற மணிமாலை போத
நிலவீசு மாகம் உறநீள்
குடையொன்ற4 தொன்றும் அதன்மேல தொன்றும்
உடையார்க்கி தென்ன குணனே’.
இஃது எழுசீர்ச் சிறப்புடைக் கழிநெடில் அடியான் வந்த ஆசிரிய நிலை விருத்தம்.
[எண்சீர் ஆசிரிய விருத்தம்]
‘அருகிவரும்11 கிளிமொழியால் அமிழ்தம் தோற்றி
அகன்பொழில்வாய் உனைப்பரவி அடைந்த மாந்தர்
கருதியதே கொடுத்துயர்ந்த காட்சி நோக்கிக்
கற்பகத்தோ டொப்புடைப்பர் சிலவர்; அல்லார்? ?
வருதளிரின் நறுமேனி மயிலஞ் சாயல்
வாணுதலாட் கரிதில்லை யதற்க ணுண்டென்
றொருதலையாய்55 ஒவ்வாமை உரைப்பர் யானோ
ஒளியியக்கி இருதிறமும்3 உடன்பட் டேனே’.
இது சிறப்புடைக் கலித்தளை தட்டு,எண்சீர்ச் சிறப்புடைக் கழிநெடில் அடியான் வந்த ஆசிரிய நிலை விருத்தம்.
ஒன்பதின் சீராலும் பதின்சீராலும் ஆகிய இடையாகு கழிநெடில் அடியாலும், பதினொருசீர் முதலாகிய கடையாகு கழிநெடில் அடியானும் வந்த ஆசிரிய நிலை விருத்தம் அடியோத்தினுட் கண்டு கொளக.1
1 யா. வி. உரைமேற். பக். 115
பி - ம். 1வடஞ்சேர் கொங்கை மலைதாந்தாம் 2 தந்ததை 5 அமிழ்துண்ட 3 அறிவென்றும் 4 குடையொன்ற 11 அரிதிவரு22 சிலவாய் வல்லார் 55 ஒருதலையாய் 33 ஒளியியக்க இருதிறமும்
|