இனி, ஆசிரிய மண்டில விருத்தம் வருமாறு:
[அறுசீர் அடிமறி மண்டில ஆசிரிய விருத்தம்]
‘செங்கயலும் கருவிளையும் செருவேலும1 பொருகணையும் செயிர்க்கும் நாட்டம்;
பங்கயமும் இலவலரும்? பனிமுருக்கும் பவழமுமே பழிக்கும் செவ்வாய்5
பொங்கரவின் இரும்படமும் புனைதேரும் பொலிவழிக்கும் புடைவீங் கல்குல்;
கொங்கிவரும் கருங்கூந்தற் கொடியிடையாள் வனமுலையும் கூற்றம் கூற்றம்’.
இஃது அறுசீர்க் கழிநெடில் அடியான் அடிமறியாய்க் கூறப்படுதலால், அடிமறி மண்டில ஆசிரிய விருத்தம்.
[எண்சீர் ஆசிரிய மண்டில விருத்தம்]
‘வெறிவிரவு புன்சடைமேல் வெள்ளம் பரக்கும்,
விறல்விசயன் ஆகத்து வெள்ளம். பரக்கும்;
கரைவிரவு நஞ்சுண்டு கண்டங் கறுக்கும்;
கழலடைந்தார் தீவினையைக் கண்டங் கறுக்கும்;
பொறிவிரவு பூண்முலையாள் போகத்த னாகும்;
பொதுநீக்கித் தன்னடைந்தார்4 போகத்த னாகும்;
நெறிவிரவு காஞ்சி நெறிக்காரைக் காட்டான்;
நிழலடைந்தார் தம்மை நெறிக்காரைக் காட்டான்’.
எனவும்,
‘நிலங்கா ரணமாக நீர்க்கங்கை ஏற்றான்;
நீண்டதா ளாலங்கோர் நீர்க்கங்கை ஏற்றான்;
சலங்கா ரணமாகச் சங்குவாய் வைத்தான்;
தாயலாள் வீயநஞ்சங்குவாய் வைத்தான்;
துலங்காச்சீர்த் தானவரைத் துன்னத்தா னட்டான்;
துன்னுவார்க்11 கின்னமிர்தம் தின்னத்தா னட்டான்;
இலங்கா புரத்தார்தம் கோமானை எய்தான்;
ஏத்தாதார்? ? நெஞ்சத்துள் எஞ்ஞான்றும் எய்தான்’.
பி - ம். 1 செவ்வேலும் ? இலமலரும் 5 பாதம் ஆகத்தும் 4 தனையடைந்தார் 11 துன்னலார்க்? எய்தாதார்
|