|
90) வஞ்சிப்பா
‘தூங்கல் இசையன வஞ்சி; மற்றவை
ஆய்ந்த தனிச்சொலோ டகவலின் இறுமே
‘இஃது என் நுதலிற்றோ?’ எனின், நிறுத்த முறையானே வஞ்சிப்பாவிற்கு ஓசையும் ஈறும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இதன் பொழிப்பு : தூங்கல் ஓசையைத் தமக்கு ஓசையாக உடையன வஞ்சிப்பாக்கள். அவை, தனிச் சொல்லோடு புணர்ந்து, ஆசிரியச் சுரிதகத்தால் இறும் (என்றவாறு).
‘தூங்கல் இசையன வஞ்சி;
ஆய்ந்த தனிச்சொலோ டகவலின் இறுமே’.
என்றாலும் கருதிய பொருளைப் பயக்கும்; ‘மற்றவை’ என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை?
‘ஏந்திசைத் தூங்கலும், அகவற் றூங்கலும், பிரிந்திசைத் தூங்கலும் என மூன்று வகைப்படும் தூங்கல் ஓசை’ என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது.
இரண்டு வஞ்சிப்பாவினையும் பதினான்கு தளையானும் உறழ, இருபத்தெட்டாம்; ஓசையும் தளையும் கூட்டி உறழ, எண்பத்து நான்காம் எனக் கொள்க.
‘தூங்கல் இசையன வஞ்சி; மற்றவை
தனிச்சொலோ டகவலின் இறுமே’.
என்னாது, ‘ஆய்ந்த’ என்று மகுத்துச் சொல்லியது, ஒரு சாரார் வேற்றடி விரவாத வஞ்சிப்பாக்களை இன்னியல் வஞ்சிப்பா எனவும், வேற்றடி விரவி வந்த வஞ்சிப்பாக்களை விரவியல் வஞ்சிப்பா எனவும் வேண்டுவர் என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது.
இவ்விரண்டு வஞ்சிப்பாவினையும் இவ்விரு பெயரானும் கூறு படுப்ப, நான்காம்; இன்னியற் குறளடி வஞ்சிப்பா, விரவியற் குறளடி வஞ்சிப்பா, இன்னியற் சிந்தடி வஞ்சிப்பா, விரவியற் சிந்தடி வஞ்சிப்பா’ என இவை மூன்று தூங்கல் ஓசையானும் உறழ, பன்னிரண்டாம் அவை பதினாலு தளையாலும் கூறுபடுப்ப, ஐம்பத்தாறாம்; ஓசையும்
|