பக்கம் எண் :
 

 செய்யுள் இயல்                                        373

 தளையும் கூட்டி உறழ, நூற்றறுபத்தெட்டாம்; பிற வகையாலும் விகற்பிக்கப் பலவுமாம் எனக் கொள்க.

     அவற்றிற்குச் செய்யுள் வருமாறு:

[குறளடி வஞ்சிப்பா]

     ‘பார்பரவிய பருவரைத்தாய்க்
     கார்கவினிய கதழொளியாய்
     நீர்மல்கிய நீண்மலரவாய்த்
     திறமல்கிய தேனினமுமாய்’,
     அதனால்
     ‘மொய்மலர் துவன்றிய தேம்பாய்
     மலரடி இணையை வைத்தவா மனனே!’

 என்பது, ஏந்திசைத் தூங்கல் ஓசையான் வந்த குறளடி வஞ்சிப்பா.

     ‘பூந்தாமரைப் போதலமரத்
     தேம்புனலிடை மீன்றிரிதர1
     வளவயலிடைக் களவயின்மகிழ்
     வினைக்கம்பலை மனைச்சிலம்பவும்
     மனைச்சிலம்பிய மணமுரசொலி
     வயற்கம்பலைக் கயலார்ப்பவும்
                              ‘நாளும்’
     ‘மகிழும் மகிழ்தூங் கூரன்
     புகழ்தல் ஆனாப் பெருவண் மையனே’.1

 என்பது, ஏந்திசைத் தூங்கல் ஓசையான் வந்த குறளடி வஞ்சிப்பா.

     ‘பானல்வாய்த் தேன்விரிந்தன;
     கானல்வாய்க் கழிமணந்தன;1
     ஞாழலொடு நறும்புன்னை
     தாழையொடு முருகுயிர்ப்ப,
     வண்டல்வாய் நறுநெய்தல்
     கண்டலொடு கடலுடுத்துத்
     தவளமுத்தம் சங்கீன்று


  1 யா. வி. 9, 15, 21 உரைமேற்.                பி - ம். 1 மீன்றிரிதரும்