|
பவளமொடு ஞெமர்ந்துராஅய்
‘இன்னதோர்
‘கடிமண முன்றிலும் உடைத்தே
படுமீன் பரதவர் பட்டினத் தானே’.1
இஃது அகவற் றூங்கல் குறளடி வஞ்சிப்பா.
‘தொடியுடைய தோண்மணந்தனன்;
கடிகாவிற் பூச்சூடினன்;
நறைகமழுஞ1 சாந்தநீவினன்;
செற்றோரை வழிதபுத்தனன்;
நட்டோரை உயர்வுகூறினன்;
வலியரென வழிமொழியலன்;?
மெலியரென மேற்செல்லலன்
பிறரைத்தான் இரப்பறியலன்;
இரப்போர்க்கு மறுப்பறியலன்;
வேந்துடை அவையகத்
தோங்குபுகழ் தோற்றினன்;
வருபடை எதிர்தாங்கினன்;5
பொருபடை புறங்கண்டனன்;
கடும்பரிய மாக்கடவினன்;
நெடுந்தெருவிற் றேர்வழங்கினன்;
ஓங்கியல 3 களிறூர்ந்தனன்;
தீந்தேறற்4 றசும்புதொலைச்சினன்;
பாணுவப்பப் பசிதீர்த்தனன்;
மயக்குடைய மொழிவிடுத்தனன்;
‘ஆங்கு,
‘செய்வகை எல்லாம் செய்தனன் ஆகலின்,
இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ
படுவழிப் படுகவிப் புகழ்வெய்யோன்11 றலையே’.2
இது பிரிந்திசைத் தூங்கல் குறளடி வஞ்சிப்பா.
[சிந்தடி வஞ்சிப்பா]
கொடிவாலன குருநிறத்தன குறுந்தாளன
வடிவாலெயிற் றழலுளையன வள்ளுகிரன
1. யா. வி. 27 உரைமேற். 2. புறம், 239.
பி - ம். 1 தண்கமழும் ? வாய்மொழியலன் 5 எதிர்கழறினன்
3 உடல் சினத்த. 4 தீஞ்சொற11 இகல்வெய்யோன்
|