பக்கம் எண் :
 

 செய்யுள் இயல்                                        375

     பணையெருத்தின் இணையரிமான் அணையேறித்
     துணையில்லாத் துறவுநெறிக் கிறைவனாகி
     எயினடுவண் இனிதிருந் தெல்லோர்க்கும்
     பயில்படுவினை பத்தியலாற் செப்பியோன்
                         ‘புணையெனத்
     திருவுறு திருந்தடி திசைதொழ
     வெருவுறும் நாற்கதி; வீடுநனி எளிதே!’1

 இஃத ஏந்திசைத் தூங்கற் சிந்தடி வஞ்சிப்பா.

     ‘தொன்னலத்தின் புலம்பலைப்பத் தொடித்தோண்மேல்
     பன்னலத்த கலந்தொலையப் பரிவெய்தி
     என்னலத்தகை இதுவென்னென எழில்காட்டிச்
     சொன்னலத்தகைப் பொருள்கருத்தினிற் சிறந்தாங்கெனப்
                                        பெரிதும்,

     கலங்கஞர் எய்தி விருப்பவும்1
     சிலம்பிடைச் செலவும் சேணிவந் தற்றே’.2

 இஃது அகவற் றூங்கல் சிந்தடி வஞ்சிப்பா.

     ‘பரலத்தம் செலவிவளொடு படுமாயின்
     இரவத்தை நடைவேண்டா இனிநனியென
     நஞ்சிறு குறும்பிடை மூதெயிற்றியர்
     சிறந்துரைப்பத் தெறுகதிர் சென்றுறும்
     ஆங்கட் டெவுட்டினர் கொல்லோ
                         எனவாங்கு.
     நொதுமலர் வேண்டி நின்னொடு
     மதுகரம் உற்ற ஆடவர் தாமே’.3

 இது பிரிந்திசைத் தூங்கற் சிந்தடி வஞ்சிப்பா.

     பட்டினப்பாலை என்னும் வஞ்சி நெடும்பாட்டு, ஆசிரிய அடி விரவி வந்த ஏந்திசைத் தூங்கல். விரவியற் குறளடி வஞ்சிப்பா, விரவியற் சிந்தடி வஞ்சிப்பா வந்தவழிக் கண்டு கொள்க. தளை விகற்பங்களால் வருவனவும் வந்தவழிக் கண்டு கொள்க.


  1. திருப்பாமாலை; யா. வி. 95. உரைமேற். 2. யா. வி. 26 உரைமேற். 3. யா. வி. 26 உரைமேற்.
  பி - ம். 1 இருப்பவும்.