பக்கம் எண் :
 

 380                                  யாப்பருங்கல விருத்தி

     முச்சீர் அடி நான்காய் அடி மறி ஆகாதே வருவன வற்றை வஞ்சி நிலை விருத்தம் என்றும், அடி மறியாய் வருவனவற்றை வஞ்சி மண்டில விருத்தம் என்றும் வழங்குவர் ஒருசார் ஆசிரியர் என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது.

     வரலாறு :

[வஞ்சி நிலை விருத்தம்]

     ‘வாளா1 வார்கழல் வீக்கிய
     தாளார் தாமுடைந் தோடினார்
     நாளை நாணுடை மங்கைமார்
     தோளை நாணிலர் தோயவே’.

 எனவும்,

     ‘முந்து கொன்ற மொய்ம்பினான்
     வந்து தோன்ற வார்சிலை
     அம்பின் எய்து கொன்றுதாய்க்
     கின்பம் எய்து வித்தபின்’.

 எனவும் இவை அடி மறி ஆகாதே வந்தமையால், வஞ்சி நிலை விருத்தம்.

[வஞ்சி மண்டில விருத்தம்]

     ‘சொல்லல்? ஓம்புமின் தோம்நனி;
     செல்லல் ஓம்புமின் தீநெறி;
     கல்லல் ஓம்புமின் கைதவம்;
     மல்லல் ஞாலத்து மாந்தர்காள்!’

     இஃது அடி மறியாய் வந்தமையால், வஞ்சி மண்டில விருத்தம். பிறவும் வந்த வழிக் கண்டுகொள்க.

[கட்டளைக் கலித் துறை]

     ‘குறளடி நான்கின மூன்றொரு தாழிசை; கோதில்வஞ்சித்
     துறையொரு வாது தனிவரு மாய்விடின்; சிந்தடிநான்
     கறைதரு காலை அமுதே! விருத்தம்; தனிச்சொல்வந்து
     மறைதலில் வாரத்தி னாலிறும் வஞ்சிவஞ் சிக்கொடியே!’1

 இக் காரிகையை விரித்து உரைத்துக் கொள்க.


  1 யா.கா. 35.
  பி - ம். 1 வாளரர். ? சொல்வல்.