பக்கம் எண் :
 

 செய்யுள் இயல்                                        381

     ‘முச்சீர் நாலடி ஒத்தவை வரினே
     வஞ்சி விருத்தம் என்றனர் கொளலே’.

 என்றார் சிறுகாக்கைபாடினியார்.

     ‘சிந்தடி நான்காய் வருவது வஞ்சிய
     தெஞ்சா விருத்தம்’.

 என்று பிறிதொரு வாய்பாட்டாற் சொல்ல வேண்டியது என்னை?

     எல்லாப் பாவும் தன் சீராலும் தன் தளையாலும் வருவன, ‘தலை யாகு இன்பா’ என்றும், தன் சீரும் தன் தளையும் பிற பாவின் சீரோடும் தளையோடும் மயங்கி வருவன, ‘இடையாகு இன்பா’ என்றும், தன் சீரும் தன் தளையும் இன்றியே வருவன ‘கடையாகு இன்பா’ என்றும் வழங்குவர் ஒருசார் ஆசிரியர் என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது. என்னை?

     ‘தன்சீர் நிலையிற் றளைதம தழீஇய
     இன்பா என்பர் இயல்புணர்ந் தோரே’.
     ‘ஏனையவை விரவின் இடையெனப் படுமே;
     தானிடை இல்லது கடையெனப் படுமே’.

 என்றார் மயேச்சுரர்.

     வஞ்சி நிலைத் தாழிசை முதலாக உடையன செய்யுள், சிறப்புடை ஏழு தளையாலும் சிறப்பில் ஏழுதளையாலும் கூறுபடுப்ப, ஓரோ ஒன்று பதினான்கு பாகுபாட்டைச் சொல்லும். பிற வகையாலும் விகற்பிக்கப் பலவுமாம்.

[நேரிசை வெண்பா]

     ‘வஞ்சிப்பா நான்குந்தன் வாலியமுன் றோசையால்
     எஞ்சாத ஈராறாம்; ஈண்டவற்றை - எஞ்சாத
     பந்தம் பதினான்கின் மாறப் பழுதின்றி
     வந்தன நூற்றறுபத் தெட்டு’.

 எனவும்,