பக்கம் எண் :
 

 செய்யுள் இயல்                                        383

[கலி விருத்தம்]

     ‘நீல நிறத்தனவாய் நெய்கனிந்து போதவிழ்ந்து
     கோலம் குயின்ற குழல்வாழி நெஞ்சே!
     கோலம் குயின்ற குழலும் கொழுஞ்சிகையும்
     காலக் கனலெரியின் வேம்வாழி நெஞ்சே!
     காலக் கனலெரியின் வேவனகண்டாலும்,
     சால மயங்குவ தென்வாழி நெஞ்சே!’1

 எனவும்,

     ‘வித்தகர் செய்த விளங்கு முடிகவித்தார்
     மத்தக மாண்பழிதல் காண்வாழி நெஞ்சே!
     மத்தக மாண்பழிதல் கண்டால் மயங்காதே
     ‘உத்தம நன்னெறிக்கண் நில்வாழி நெஞ்சே!
     உத்தம நன்னெறிக்கண் நின்றூக்கம் செய்தியேல்
     சித்தி படர்தல் தெளிவாழி நெஞ்சே!’2

 எனவும் இத் தொடக்கத்தன ஒருசார் வளையாபதிப் பாட்டும்,

     ‘கல்லினைக் கதிர்மணிக் கவண்பெய்து கானவற்
     கொல்லையிற் களிறெறி வெற்ப யாதே;
     கொல்லையிற் களிறெறி£ வெற்பனிவ் வியனாட்டார்
     பல்புகழ் வானவன் றாளே யாதே;
     பல்புகழ் வானவன் றாளொடு மன்னர்க்கோர்1
     நல்ல படாஅ பறையே யாதே’.3

 எனவும்,

     ‘ஈரிதழ் இணர்நீலம் இடைதெரியா தரிந்திடூஉம்
     ஆய்கதிர் அழற்செந்நெல் அரியே யாதே;
     ஆய்கதிர் அழற்செந்நெல் அகன்செறுவில் அரிந்திடூஉம்
     காவிரி வளநாடன் கழலே யாதே;
     காவிரி வளநாடன் கழல்சேர்ந்த மன்னர்க்
     காரர ணிற்றல் அரிதே யாதே’.4

 எனவும்,

     ‘நித்திலம் கழலாக நிரைதொடி மடநல்லார்
     எக்கர்வான் இருமணல் இணரே யாதே;


  1,2. வளையாபதி. 3,4. முப்பேட்டுச் செய்யுள்.
  பி - ம். 1 தான்சேரா மன்னர்க்கோர்.