எக்கர்வான் இருமணல் இணர்புணர்ந் திசைத்தாடும்
கொற்கையார் கோமான் கொடியே யாதே;
கொற்கையார் கோமான் கொடித்திண்டேர் மாறற்குச்
செற்றர ணிற்றல் அரிதே யாதே’1
எனவும் இத் தொடக்கத்தன ஒருசார் முப்பேட்டுச் செய்யுளும் ஆறடி
யான் மிக்கனவேனும், ஒருபுடை ஒப்புமை நோக்கிக் கலி விருத்தத்தின்
பாற்படுத்து வழங்கப்படும்; கொச்சகக் கலியின் பாற்படுத்தினும் ஆம். இவை
மிக்கன.
இனிக் குறைந்து வருவன, ஆசிரியப்பாவிற்கு மூன்றடிச் சிறுமை
என்றார் ஆயினும், கலிக்கும் வஞ்சிக்கும் சுரிதகமாய் இரண்டடியால்
வந்தனவும் உள. அவற்றையும் இவ்விலக் கணத்தாற் குற்றம் இல்லை
என்று வழங்கும். மருட்பாவும் அவ்வாறே எனக் கொள்க.
வரலாறு :
[வஞ்சிப்பா]
‘சுற்றும்நீர் சூழ்கிடங்கிற்
பொற்றாமரைப் பூம்படப்பைத்
‘தெண்ணீர்
‘நல்வயல் ஊரன் கேண்மை
அல்லிருங் கூந்தற் கலரா னாதே!’
வஞ்சிப்பாவிற்கு மூன்றடிச் சிறுமை என்று வரை யறுத்துச் சொன்னார்.
இஃது இரண்டடியால் வந்ததாயினும், ஒருபுடை ஒப்புமை நோக்கி,
வஞ்சிப்பாவின்பாற்படுத்து வழங்கப்படும்.
‘இரண்டடியால் வஞ்சி வரும்’ என்று எடுத்து ஓதினார் மயேச்சுரர்
முதலாகிய ஒருசார் ஆசிரியர் எனக் கொள்க. என்னை?
‘வெண்பா ஆசிரியம் கலியே வஞ்சியென
நுண்பா உணர்ந்தோர் நுவலுங் காலை
இரண்டும் மூன்றும் நான்கும் இரண்டும்
திரண்ட அடியின் சிறுமைக் கெல்லை’.2
(மயேச்சுரர்)
என்றார் ஆகலின்.
1. முப்பேட்டுச் செய்யுள். 2. யா. கா. 14 உரைமேற்.
|