பக்கம் எண் :
 

 செய்யுள் இயல்                                        385

     அவர் காட்டும் பாட்டு:

[வஞ்சிப்பா]

     ‘பூந்தண்சினை மலர்மல்கிய பொழிற்பிண்டி
     வேந்தன்புகழ் பரவாதவர் வினைவெல்லார்;
                         ‘அதனால்
     ‘அறிவன தடியிணை பரவப்
     பெறுகுவர் யாவரும் பிறவா நெறியே’.1

     இதனை முச்சீர் அடி வஞ்சியாக அலகிட்டு, அகவல் இரண்டடி ஆமாறு கண்டு கொள்க.

     ‘சிறியகட் பெறினே’2 என்னும் இணைக்குறல் ஆசிரியப் பாவினுள் ஐஞ்சீர் அடியும் அருகி வந்தன எனக் கொள்க.

     ‘அணிகிளர் சிறுபொறி அவிர்துத்தி மாநாகத் தெருத்தேறித்
     துணியிரும் பனிமுன்னீர் தொட்டுழந்து மலைந்தனையே’13

 இக் கலியுள் ஐஞ்சீர் அடியும் வந்தன எனக் கொள்க.

     ‘கலியொடு வெண்பா அகவல் கூறிய
     அளவடி தன்னால் நடக்குமன் அவையே’.4

 என்ற சூத்திரத்தில் ‘அவை’ என்ற விதப்பினாலும், இச் சூத்திரத்தாலும் இவற்றையும் குற்றம் இல்லை என்று கொண்டு வழங்குப, புராண கவிஞராற் சொல்லப்பட்டன ஆகலின்.

[குறள் வெண்பா]

     ‘நிலம்பாஅய்ப்பாஅய்ப் பட்டன்று நீலமா மென்றோள்
     கலம்போஒய்ப்போஒய்க் கௌவை தரும்’.5

     ‘இவ் வெண்பாவும் ஐஞ்சீர் அடியும் வந்தது பிற’ எனின், அளபெடை சீரும் தளையும் அடியும் தொடையும் கெடாமைப் பொருட்டு வேண்டுவதல்லது, அளபெழுந்து கெட நின்றவிடத்து வேண்டப்படாது. என்னை?

     ‘மாத்திரை வகையாற் றளைதபக் கெடாநிலை
     யாப்பழி யாமைநின் றளபெடை வேண்டும்’.

 என்றாராகலின்.


  1. திருப்பா மாலை 2. யா. வி. 72 உரைமேற். 3. யா. வி. 95 உரைமேற். 4. யா. வி. 27. 5. யா. வி. 4, 95 உரைமேற். பி - ம். 1 தொட்டுத்துயி லமர்ந்தனையே, தோட்டவிழ்ந்து மலர்ந்தனையே.