அதனுள் முதற்சீர் புளிமாங்காயாகவும் இரண்டாஞ்சீர் தேமாங்கா
யாகவும் அலகிட்டு, நாற்சீரேயாகக் கொள்க.
‘ஐஞ்சீர் வெள்ளையுட் புகாமை எற்றாற் பெறுதும்?’ எனின்
‘ஐஞ்சீர் அடுக்கலும் மண்டிலம் ஆக்கலும்
வெண்பா யாப்பிற் குரிய அல்ல’.1
என்று நக்கீரனார் அடி நூலுள் எடுத்து ஓதப்பட்டமையாற் பெறுதும்;
‘பிறநூல் முடிந்தது தானுடம் படுதல்’ என்பது தந்திர உத்தி ஆகலின்.
இனி ‘ஆசிரியத்துள்ளும் கலியுள்ளும் ஐஞ்சீர் அடி வரும் என்பது
எற்றாற் பெறுதும்?’ எனின்,.
‘வெள்ளை விரவியும் ஆசிரியம் விரவியும்
ஐஞ்சீர் அடியும் உளவென மொழிப’.2
என்று தொல்காப்பியனார் எடுத்து ஓதினமையாற் பெறுதும்.
இப்பாட்டுக்களும் செய்யுளியலுட் காட்டின எனக் கொள்க.
[குறளடி வஞ்சிப்பா]
‘தாழிரும் பிணர்த்தடக்கைத்
தண்கவுள் இழிகடாத்துக்
காழ்வரக் கதம்பேணாக்
கடுஞ்சினத்த களிற்றெருத்தின்
நிலனெளியத் தொகுபீண்டித்
கடல்மருளப் படைநடுவண்
ஏற்றுரியின் இமிழ்முரசம்
கூற்றுட்க எழீஇச்சிலைப்பக்
கேளல்லவர் மிடல்சாய
வாள்வலியால் நிலம்வௌவி
முழுதாண்டவர் வழிகாவல்
குன்றுமருளச் சோறுகுவைஇப்
புனல்மருளநன் னெய்சொரிந்து
திருமறைமுதல்வர் வழிகாட்ட
1. நக்கீரனார் அடிநூல். 2. தொல். பொ. 375.
|