ஆகுதியின் அழலருத்திப்
பல்கேள்வித் துறைபோகிய
தொல்லிசையான் மீக்கூறும்
கொற்கையார் குலவேறே!
கூடலார் அடுபொருந!
என்றியான், அல்கியார்ந்த அரிக்கிணையின்
மரபுளியின் வரவிசைப்ப
நனிவிரும்பி நயனோக்கி
இனிவேண்டாநின் கிணைத்தொழிலென
எனக்கொவ்வாமைப் பெரிதருளித்
தனக்கொப்பத் தலையளித்தனன்
அதற்கொண்டும், கலங்கொண்டன கள்ளென்கோ!
காழ்கோத்தன சூடென்கோ!
நெய்கனிந்தன வறையென்கோ!
குய்கொண்டன துவையென்கோ!
எனைப்பல எமக்குத்தண்டாது
வைகறொறுங்கைகவி சொரிதரலை
விலங்குகதிர் அவிர்வெள்ளி
அலங்குபெண்ணை வழியுறையினும்
குளஞ்சேர்த்து சனிகொட்பினும்
அருந்தே மாந்தனம1 யாமே;
வருந்தல் வேண்டா வாழ்கநின் றாளே!’?
முப்பத்தாறு அடியான் வந்த இக் குறளடி வஞ்சியுள் ‘என்றியான்’
எனவும், ‘அதற்கொண்டும்’ எனவும் சீர் கூனாய் வந்தன.
‘தூங்கல் இசையன வஞ்சி; மற்றவை
ஆய்ந்த தனிச்சொலோ டகவலின் இறுமே’.1
என்றார், இது சுரிதகத்தருகு தனிச்சொல் இன்றி வந்ததாயினும், ‘வஞ்சிப்பா’
என்றே வழங்கப்படும்.
பிறவும் புராண கவிஞராற் பாடப்பட்டு, மிக்கும் குறைந்தும்
வருவனவற்றை இவ்விலக்கணத்தால் ஒருபுடை ஒப்புமை நோக்கிப்
பெயரிட்டு வழங்கப்படும். என்னை?
1 யா. வி. 69.
பி - ம். 1 மார்ந்தனம் ? அருளே.
|