பக்கம் எண் :
 

 செய்யுள் இயல்                                        389

     ‘ஆரிடம்’ என்பது, உலகியற் செய்யுள்கட்கு ஓதிய உறுப்புக்களின் மிக்கும் குறைந்தும் கிடப்பன எனக் கொள்க.

     ‘வரிசை பெரிதுடையர்’ என்பது மிக்கது. அல்லன், மிக்கும் குறைந்தும் வந்தன.

     அவ்வாரிடச் செய்யுள் பாடுதற்கு உரியர், ஆக்குதற்கும் கெடுத் தற்கும் ஆற்றலுடையார் ஆகி, முக்காலத்துப் பண்பும் உணரும் இருடிகள் எனக் கொள்க. என்னை?

     ‘உலகியற் செய்யுட் கோதிய அளவியற்1
     குறையவும் விதப்பவும் குறையா ஆற்றல்
     இருடிகள் மொழிதலின் ஆரிடம் என்ப’.1

 எனவும்,

     ‘ஆரிடச் செய்யுள் பாடுதற் குரியோர்
     கற்றோர் அறியா அறிவுமிக் குடையோர்
     மூவகைக் காலப் பண்புமுறை உணரும்
     ஆற்றல் சான்ற அருந்தவத் தோரே2’.2

 எனவும் சொன்னார் பாட்டியல் மரபு உடையார் ஆகலின்.

     அல்லது, வடநூல் உடையாரும், பிங்கலம் முதலாகிய சந்தோபிசிதிகளுள் விருத்தச் சாதி விகற்பங்களாற் கிடந்த உலகியற் சுலோகங்களில் மிக்கும் குறைந்தும் கிடப்ப இருடிகளாற் சொல்லப்படுவனவற்றை ‘ஆரிடம்’ என்று வழங்குவர் எனக் கொள்க.

     ‘அஃதே எனின்,
     ஏரி இரண்டும் சிறகா, எயில்வயிறாக்
     காருடைய பீலி கடிகாவாச் - சீரிய
     அத்தியூர் வாயா, அணிமயிலே போன்றதே
     பொற்றேரான் கச்சிப் பொலிவு’.3

 எனவும்,

     ‘உடையராய்ச் சென்றக்கால் ஊரெலாம் சுற்றம்;
     முடையவராய்க்5 கோலூன்றிச் சென்றக்கால் - சுற்றம்
     உடைவயிறும3 வேறுபடும்’.4

 எனவும்,


  1,2, பாட்டியல் மரபு. 3. தண்டி. 39 உரைமேற். 4 இன்னிலை, 12.
  பி - ம். 1 அளவையிற் 2 தோமில் ஆற்றல் துணிந்திசினோரே.
 5 முடவராய் 3 உடையானும்