‘கண்டகம் புற்றிக் கடக மணிதுளங்க
ஒண்செங் குருதியுள் ஓஒ கிடந்ததே - கெண்டிக்
கெழுதகைமை இல்லேன் கிடந்தூடப் பன்னாள்
அழுதகண் ணீர்துடைத்த கை!’1
எனவும் இத் தொடக்கத்துப் பெருஞ்சித்திரனார்
செய்யுளும் ஒளவையார் செய்யுளும், பத்தினிச் செய்யுளும் முதலாக
உடையன எல்லாம் எப்பாற்படும்? எனின், ‘ஆரிடப் போலி’ என்றும்,
‘ஆரிட வாசகம்’ என்றும் வழங்கப்படும் என்க.
இவையெல்லாம், இருடிகள் அல்லா ஏனையோராகிய மனத்தது
பாடவும், சாவவும் கெடவும் பாடல் தரும் கபில பரண கல்லாட மாமூலப்
பெருந்தலைச் சாத்தர் இத்தொடக்கத்தோராலும், பெருஞ்சித்திரனார்
தொடக்கத்தோராலும் ஆரிடச் செய்யுட்போல மிகவும் குறையவும்
பாடப்படுவன எனக் கொள்க. என்னை?
‘மனத்தது பாடும் மாண்பி னோரும்
சினத்திற் கெடப்பாடும் செவ்வியோரும்
முனிக்கணச் செய்யுள் மொழியவும் பெறுப’. 1
என்பது பாட்டியல் மரபு ஆகலின்.
வரலாறு :
இலைநல வாயினும் எட்டி பழுத்தாற்
குலைநல வாங்கனி கொண்டுண லாகா;- விலையான்
முலைநலம் கண்டு2முறுவலிக் கின்ற
வினையுடை நெஞ்சினை வேதுகொ 5 ளீரே’.2
இம்மூலர் வாக்கு மிக்கு வந்தவாறு கண்டு கொள்க.
‘வச்சிரம் வாவி நிறைமதி முக்குடை
நெற்றிநேர் வாங்கல் விலங்கறுத்தல்
உட்சக் கரவடத் துட்புள்ளி என்பதே
புட்கரனார் கண்ட புணர்ப்பு’.
இது மந்திர நூலுட் புட்கரனார் கண்ட எழுத்துக்குறி வெண்பா. இஃது
இரண்டாம் அடி குறைந்து வந்தது.
‘கிடங்கிற் கிடங்கில்’ என்றும் பொய்கையார் வாக்கு, மிக்கு வந்தது.
1. தண்டி 116. 2 உரைமேற். 1. திருமந்திரம் 294
பி - ம். 1 பெறுமே 2 கொண்டு 5 வேறுகொ
|