பக்கம் எண் :
 

 செய்யுள் இயல்                                        391

     ‘கறைப்பற் பெருமோட்டுக் காடு கிழவோட்
     கரைத்திருந்த சாந்துதொட் டப்பேய்
     மறைக்குமா காணாது மற்றைத்தன் கையைக்
     குறைக்குமாம் கூர்ங்கத்தி கொண்டு’.

     இது பூதத்தாரும் காரைக்காற்பேயாரும் பாடியது. இதுவும் இரண்டாம் அடி குறைந்து வந்தவாறு கண்டு கொள்க.

     ‘அறிவுடை நம்பியார் செய்த ‘சிந்தம் எப்பாற்படுமோ?’ எனின், தூங்கல் ஓசைத்தாய்ச் சுரிதகத்தருகு தனிச்சொல் இன்றித் ‘தாழிரும் பிணர்த்தடக்கை’ என்னும் வஞ்சிப்பாவே போல வந்தமையான் ‘தனிச் சொல் இல்லா வஞ்சிப்பா என்று வழங்காமோ?’ எனின், வழங்காம்; செவியறிவுறூஉவாய்’ வஞ்சியடியால் வந்து பொருள் உறுப்பு அழிந்தமையால், ‘உறுப்பழி செய்யுள்’ எனப்படும்; ‘புறநிலை வாழ்த்தும், வாயுறை வாழ்த்தும், அவையடக்கியலும், செவியறி வுறூ உம் என்னும் பொருண்மேற் கலியும் வஞ்சியுமாய் வரப்பெறா’ என்றாராகலின் என்னை?

     ‘வழிபடும் தெய்வம் நிற்புறம் காப்பப்
     பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து
     பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே
     கலிநிலை வகையும் வஞ்சியும் பெறாஅ’.1

     ‘வாயுறை வாழ்த்தே அவையடக் கியலே
     செவியறி வுறூஉவென அவையும் அன்ன’.2

 என்றார் தொல்காப்பியனார் ஆகலானும்,

     ‘புறநிலை வாயுறை செவியறி அவையடக்
     கெனவிவை வஞ்சி கலியவற் றியலா’.

 என்றார் நல்லாறனார் ஆகலானும்.

     ‘அஃதே எனின், விளக்கத்தனார் பாடிய ‘கெடலரு மாமுனிவர்’ என்னும் கலிப்பா, புறநிலை வாழ்த்தாய் வந்தது பிற, எனின், அஃது ஆசிரியச் சுரிதகத்தால் வந்தமையால், குற்றம் இன்று எனக் கொள்க.

     ‘திருக்கொண்டு பெருக்கம் எய்திவீற் றிருந்து
     குற்றம் கெடுத்து விசும்பு தைவரக்


  1. தொல். பொ. 422. 2. தொல். பொ. 423