பக்கம் எண் :
 

 394                                   யாப்பருங்கல விருத்தி

     ‘வஞ்சி இறுதியும் ஆகும் அதுவே’.1
     ‘அசைகூன் ஆகும் என்மனார் புலவர்’.2

 என்றார் பல்காயனார் ஆகலானும்,

     ‘தானே அடிமுதற் பொருள்பெற வருவது
     கூன்என மொழிப குறியுணர்ந் தோரே’.3
     ‘வஞ்சி இறுதியும் வரையார் என்ப.’4

 என்றார் நற்றத்தனார் ஆகலானும் எனக் கொள்க.

 வரலாறு :

[நேரிசை வெண்பா]

     ‘உதுக்காண், சுரந்தானா வண்கைச் சுவரன்மாப்பூதன1
     பரந்தானாப் பல்புகழ் பாடி - இரந்தார்மாட்
     டின்மை அகல்வது போல இருணீங்க
     மின்னும் அளித்தோ மழை’.

 என இவ்வெண்பாவினுள் அடிமுதற்கண் ‘உதுக்காண்’ எனத் தனிச்சொல் வந்தவாறு கண்டு கொள்க.

[நேரிசை ஆசிரியப்பா]

     ‘அவரே, கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலை
     வாடா வள்ளியங் காடிறந் தோரே;
     யானே, தோடார் எல்வளை நெகிழ நாளும்
     பாடமை சேக்கையிற் படர்கூர்ந் திசினே;
     அன்னள் அளியள் என்னாது மாமழை
     இன்னும் பெய்ய 2 முழங்கி
     மின்னும் தோழி! என்னுயிர் குறித்தே’55

 என இவ்வாசிரியத்துள் ‘அவரே’ எனவும், ‘யாமே’ எனவும், ‘கூன்’ வந்தவாறு கண்டு கொள்க.

[தரவுக் கொச்சகம்]

     ‘உலகினுள், பெருந்தகையார் பெருந்தகைமை
                                   பிறழாவே; பிறழினும்
     இருந்தகைய இறுவரைமேல் 3 எரிபோலச் சுடர்விடுமே;


  1-4 யா. வி. 95 உரைமேற். 5. குறுந். 216.
  பி - ம். 1 கவானமா, கவாணமா 2 பெய்யு 5 என்னின்னுயிர்
  இருவரைமேல்