சிறுதகையார் சிறுதகையை சிறப்பெனினும் 1 பிறழ்வின்றி
உறுதகைமை உலகினுக்கோர் ஒப்பாகித் தோன்றாதே’.
என இக்கலியடி முதற்கண் ‘உலகினுள்’ எனத் தனிச்சொல் வந்தவாறு கண்டு
கொள்க.
[குறளடி வஞ்சிப்பா]
‘உலகே, முற்கொடுத்தார் பிற்கொளவும்
பிற்கொடுத்தார் முற்கொளவும்
உறுதிவழி ஒழுகுமென்ப;
அதனால்,
நற்றிறம் நாடுதல் நன்மை
பற்றிய 5யாவையும் பரிவறத் துறந்தே’.
என இவ்வஞ்சிப்பாவின் அடி முதற்கண் ‘உலகே’ எனத் தனிச்சொல்
வந்தவாறு கண்டு கொள்க.
‘தாழிரும் பிணர்த்தடக்கை’1 என்னும் வஞ்சிப் பாட்டினுள் அடி
முதற்கண் ‘என்றியான்’ எனவும், ‘அதற்கொண்டும்’ எனவும் சீர் கூனாய்
வந்தன.
‘மாவழங்கலின் மயக்குற்றன வழி’2
என வஞ்சியின் இறுதி தனிச் சொல் வந்தவாறு கண்டு கொள்க.
‘கலங்கழாஅலிற் றுறை கலக்குற்றன’.3
என வஞ்சியடியின் நடு ‘துறை’ எனத் தனிச் சொல் வந்தவாறு.
பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க.
‘காமர் கடும்புனல்’ என்னும் கலிப்பாவினுள்,
‘சிறுகுடி யீரே! சிறுகுடி யீரே!’4
என ஓரடியால் தனிச்சொல் வந்தவாறு; ஓரடியாலும் கலிக்கண் தனிச்சொல்
வரப்பெறும் ஆகலின். என்னை?
‘வெண்சீர் வரைவின்றிச் சென்று விரவினும்
தன்பால் மிகுதியின் வருவன எல்லாம்
வஞ்சி உரிச்சீர் விரவினும் வெண்பா
அருகுந தனிச்சொல் அசைச்சீர் அடியே’.
என்றாராகலின்.
1. யா. வி. உரைமேற். 2. புறம் 345-3. 3. புறம் 345:4. 4. கலி. 39:11.
பி - ம். 1 சிறப்பென்னும் 2 ஒழுகுமே 5 பற்றிற்.
|