பக்கம் எண் :
 

 396                                  யாப்பருங்கல விருத்தி

     ‘அடிமுதற் பொருள்பெற வருவது தனிச்சொல்;
     இறுதியும் வஞ்சியுள் இயலும் என்ப’.

 என்றாலும் கருதிய பொருளைப் பயக்கும். ‘அஃது’ என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னையோ! எனின், ‘நான்கு பாவின் அடி முதற்கண்ணும் சீர்கூனாய் வரப்பெறும்’, என்பாராயினும் வஞ்சியடியின் முதற்கண் அசை கூனாய் வருவதும், உகர ஈறாகிய நேரீற்று இயற்சீர் கூனாய் வருவதும் சிறப்புடைய வஞ்சியடியின் இடையும் இறுதியும் அசை கூனாய் வருவதன்றிச் சீர் கூனாய் வாராது; ஆண்டு உகர ஈறாகிய நேரீற்று இயற்சீர் அருகிக் கூனாய் வரவும் பெறும்; அச்சீர், அல்லாப் பாவின் அடி முதற்கண் அருகி அல்லது கூனாய் வாராது; கொச்சகக் கலியுள் ஓரடி கூனாய் வருமாயினும், சிறப்பில்லை; வெண்பா, ஆசிரியம், கலி என்னும் இவற்றின் அடியுள் இடையும் இறுதியும் கூன் வரப் பெறாது என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது.

     வரலாறு :

     ‘அடி, அதர்சேர்தலின் அகஞ்சிவந்தன’.

 எனவும்,

     ‘மா, எறிபதத்தான்1 இடங்காட்ட’.1

 எனவும் வஞ்சியடியின் முதற்கண் ‘அடி’ எனவும், ‘மா’ எனவும் அசை கூனாய் வந்தவாறு.

     ‘வேந்து, வேல்வாங்கிப் பிடித்துருத்தலின்’

 எனவும்,

     ‘தெருவு, தேரோடத் தேய்ந்தகன்றன’.

 எனவும் வஞ்சியடியின் முதற்கண் உகர ஈறாகிய நேரீற்று இயற்சீர் கூனாய் வந்தவாறு.

 வஞ்சியடி இறுதி அசை கூனாய் வந்தன மேற்காட்டின எனக் கொள்க.

     ‘வடாஅது

     பனிபடு நெடுவரை வடக்கும், தெனாஅ
          துருகெழு குமரியின் தெற்கும், குணாஅது


  1. புறம். 4:7
  பி - ம். 1 எறித்தான்.