பக்கம் எண் :
 

 398                                   யாப்பருங்கல விருத்தி

I

     நிரல்நிறை முதலிய பொருள்கோட் பகுதியாவன: நிரல்நிறையும், சுண்ணமொழி மாற்றும், அடி மறி மொழி மாற்றும், அடி மொழி மாற்றும், பூட்டுவிற் பொருள் கோளும், புனல் யாற்றுப் பொருள் கோளும், அளை மறி பாப்புப் பொருள்கோளும், தாப்பிசைப் பொருள்கோளும், கொண்டு கூட்டுப் பொருள்கோளும் என இவ்வொன்பதும் எனக் கொள்க.

     அவற்றுள் [1] நிரல்நிறைப் பொருள்கோள் இரண்டு வகைப்படும்: பெயர் நிரல் நிறையும், வினை நிரல்நிறையும் என.

     அவற்றுள் பெயர் நிரல்நிறை வருமாறு:

[இன்னிசை வெண்பா]

     ‘கொடிகுவளை கொட்டை நுசுப்புண்கண் மேனி
     மதிபவளம் முத்தம் முகம்வாய் முறுவல்
     பிடிபிணை மஞ்ஞை நடைநோக்குச் சாயல்
     வடிவினளே வஞ்சி மகள்’.

 எனவும்,

[நிலைமண்டில ஆசிரியப்பா]

     ‘பொறையன் செழியன் பூந்தார் வளவன்
     கொல்லி கொற்கை நல்லிசைக் குடந்தை
     பாவை முத்தம் பல்லிதழ்க்? குவளை
     மாயோள் முறுவல் மழைப்பெருங் கண்ணே’.

 எனவும்,

[நேரிசை வெண்பா]

     ‘கடைசெப்பும் வேயும் கதிர்முலையும் தோளும்;
     இடைசெப்பின் ஏர்கொடி; அன்னம் - நடைசெப்பின்;
     வண்டுவாழ் கூந்தலாள் வாயும் மடநோக்கும்
     தொண்டைமான் ஆறை மகட்கு’.

 எனவும்,