பக்கம் எண் :
 

 4                                     யாப்பருங்கல விருத்தி

     முதல் நூலாவது, குற்றம் கெடுத்து முற்ற உணர்ந்த நற்றவத்தோன் சொற்றதாகும். என்னை?

     ‘வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
     முனைவன் கண்டது முதல்நூல் ஆகும்.’1

 என்றாராகலின்.

     வழிநூலாவது, முதல் நூலோடு ஒத்த முடிவிற்றாய்த் தனது, ஓர் விகற்பப் படக் கிடப்பது. என்னை?

     ‘முன்னோர் நூலின் முடிபொருங் கொத்துப்
     பின்னோன் வேண்டும் விகற்பம் கூறி
     அழியா மரபினது வழிநூல் ஆகும்’2

 என்றாராகலின்.

     சார்பு நூலாவது, அவ்விருவர் நூலுள்ளும் ஒரு வழி முடித்த பொருளை  ஓர் ஆசிரியன் யாதானும் ஓர் உபகாரம் நோக்கி ஒரு கோவைப்பட
 வைப்பது என்னை?

     ‘இருவர் நூற்கும் ஒருசிறை தொடங்கித்
     திரிபுவே றுடையது புடைநூல் ஆகும்.’3

 என்றாராகலின்.

     நான்காவது ‘எதிர்நூல்’ என்பதும் ஒன்று உண்டு. யாது அது? முதல்வன்  நூலுள் முடிந்த பொருளை ஓர் ஆசிரியன் யாதானும் ஒரு காரணத்தாற் பிறழ  வைத்தால், அதனைக் கருவியால் திரிபு காட்டி ஒருவாமை வைத்ததற்கு  ஒள்ளியோன் ஒரு புலவனான் உய்க்கப்படுவது. என்னை?

     ‘தன்கோள் நிறீஇப் பிறன்கோள் மறுப்ப
     தெதிர்நூல் என்ப ஒருசா ரோரே.’4

 என்றாராகலின்.

     இனி, ‘நூல்’ என்ற சொற்குப் பொருள் உரைக்குமாறு: நூல் போறலின்,  ‘நூல்’ எனப்படும். என்னை? பாவை போல் வாளைப் ‘பாவை’ என்றாற்  போல. ‘யாதோ நூல் போலுமாறு?’ எனின், நுண்ணிய பலவாகிய பஞ்சின  நுனிகளால்


     1தொல். பொ. செய். மரபு. சூ. 94, 2நன். பாயிரம், சூ. 7. 3நன். பாயிரம்,  சூ, 8, 4இறை. சூ. 1. உரைமேற்.