இனி ஐந்து வகைப்பட்ட பதினேழ் நிலத்தவாய் எழுபது தளையிற்றீர்ந்த சிறப்புடை நாற்சீரடி அறுநூற்று இருபத் தைந்தும் ஆவன சொல்லப்படும்.
‘ஐவகை அடியும் விரிக்குங் காலை
மெய்வகை அமைந்த பதினேழ் நிலத்த
எழுபது தளையின்1 வழுவில வாகி
அறுநூற் றிருபத் தைந்தா கும்மே’.1
என்றாராகலின்.
ஐவகை அடியும் பதினேழ் நிலமும் மேற் சொல்லப்பட்டன.2 எழுபது
தளை வழுவாவன.
ஆசிரிய நிலம் பதினேழுள்ளும் வெண்டளை தட்பப் பதினேழும்,
கலித்தளை தட்பப்
பதினேழுமாய், ஆசிரியப்பாவிற்கு முப்பத்து நான்கு தளை வழுவாம்.
என்னை?
‘ஐவகை அடியும் அறிவுறத் தெரியின்
மெய்வகை அமைந்த பதினேழ் நிலமே’.
‘ஆசிரிய மருங்கின் ஐந்தும் வரினே
சீரிய வெள்ளைக் கலித்தளை வரினே
நாலெண் வழுவோ டிரண்டென மொழிப’.
என்றாராகலின்,
வெள்ளை நிலம் பத்தினுள்ளும் ஆசிரியத்தளை தட்பப் பத்தும்,
கலித்தளை தட்பப்
பத்துமாய் வெண்பாவிற்கு இருபது தளை வழுவாம்.
என்னை?
‘சிந்தோ டளவு நெடிலீ றொழிய
வந்த உரிமை ஈரைந்து நிலத்தும்
மென்றளை கலியொடு தட்டன வெள்ளைக்
கொன்றிய தளைவழு இருப தென்ப’.
என்றாராகலின்.
‘மென்றளை’ என்பது ஆசிரியத் தளை.
1. தொல். பொ. 362 2. யா. வி. 49 உரை மேற்கோளாகிய வெள்ளை நிலம்
னும் வெண்பாவை நோக்குக.
பி - ம். 1 வகைமையின்.
|