பக்கம் எண் :
 

 ஒழிபு இயல்                                            511

(எழுசீர் விருத்தம்)

      ‘அன்னங் கண்டர விந்த வாவி யதுகண் டம்பூம் பொழிற்புன்னைநின்
      றின்னுங் கண்ட ஞாழலி னீழ லிதுகண் டிங்கேநில் யான்சென்றுகோன்
      மன்னும் காவி விரிந்த வாச மலரா லனைகே தகைப்போது
      பொன்னம் போது கவிரந்தாது துயலத் தண்டாது தந்தீவனே’.

 இது பத்தொன்பது எழுத்தடி அளவியற்சந்தம்.

      ‘அருவிப் பலவரை காள்! சொக் கத்தருவே! அம் மாதவிப் பந்தர்காள்!
      மருவிப் போதினி கோது சூத வனமே வடாதுன்ன லீர்களாற்
      செருவிற் கேயுரு வன்ன செம்மலிக் குன்றத் திடையின்வந் தாலவர்க்
      கிருவிப் பைம்புன நோக்கி யேயிளை யாரினைந் தெய்தினார்
                                                      என்மினே’.

 இஃது இருபதெழுத்தடி அளவியற்சந்தம்.

      ‘பின்றாழும் பீலி கோலிப் பெருமுகில் அதிரப்
           பிண்டமாய் வண்டுபாடப்
      பொன்றாழும் கொன்றை நீழற் புனமயில் இனமாய்ப்
           பூமிசைப் போந்துதேதே
      என்றாடக் கோடல் இளகின இதுகார் என்ப
           தியங்கி நின்றுநாளைச்
      சென்றோர்தேர் வந்து தோன்றும் செறிவளை மடநல்லாய்
           செல்கநின் செல்லறான்’.

 எனவும்,

      ‘வண்பாராண் மன்னர்பொன் மகுடங் கிரிகாள
           மாலை கொய்யாத போதினிற்
      பெண்பாலோர் கேளவன் ஞானப் பெருங்கட
           லைவர்ப் பேரிளம் பெண்டிராதி
      பண்பாரென் பாடு பாதம் பரமநிருப
           மாலைக் குணகீர்த்தி என்பர்
      நண்பாரின் கமலமாண் புடையவ ரடைவர்
           நற்குணச் சித்தி தானே’.