|
எனவும், இவை இருபத்தோரெழுத்தடி அளவியற்சந்தம்.
‘அருமாலைத் தாதலர நின்றமர் குழுவினோ
டாயிரச் செங்க ணானும்
திருநாமம் செப்பறேற் றான்றிகழ் ஒளிவளையத்
தேசுமீ தூர வீரர்1
கருமாலைக் காதிவென் றாய்கமல சரணமும்
கண்டுகை கூப்ப மாட்டாப்
பெருமான்மற் பெற்றியா? னின்பெருமை அருகனாம்
வல்லமோ பேசு மாறே?’
இஃது இருபத்திரண்டெழுத்தடி அளவியற்சந்தம்.
[எண்சீர் விருத்தம்]
‘சோதி மண்டலம் தோன்றுவ துளதேற்
சொரியு மாமலர்த் தூமழை யுளதேற்
காதி வென்றதோர் காட்சியு முளதேற்
கவரி மாருதம் கால்வன வுளவேற்
பாத பங்கயம் சேர்நரு முளரேற்
பரம கீதமும் பாடுந ருளரேல்
ஆதி மாதவர் தாமரு குளரேல்
அவரை யேதெளிந் தாட்படு மனனே!’
இஃது இருபத்து மூன்றெழுத்தடி அளவியற்சந்தம்.
‘விலங்கு நீண்முடி யிலங்கு மீமிசை
விரிந்த மாதவி புரிந்த நீள்கொடி
உலங்கொ டாள்கொடு சலந்து சூழ்தர
உறைந்த புள்ளின நிறைந்த வார்சடை
அலங்க றாழ்தர மலர்ந்த தோள்வலி
அசைந்த ஆடவர் இசைந்த சேவடி
வலங்கொள் நாவலர் அலர்ந்த வானிடை
வரம்பில் இன்பமும் ஒருங்கு சேர்வரே’.
இஃது இருபத்து நான்கெழுத்தடி அளவியற்சந்தம்.
பி - ம். ? தேசுமூ தூர வீரக் 1 போற்றியா
|