பக்கம் எண் :
 

 514                                   யாப்பருங்கல விருத்தி

      கொங்கு சேர்குளிர் பூம்பிண்டிச்
      செங்க ணானடி சேர்மினே’.

 எனவும்,

      ‘போத லேபொரு ளாக்கொண்ட
      காத லாற்கொரு காரியம்
      தூது சென்றுரை யாய்தும்பி!
      நீதி யானெறி போகியே’.

 எனவும்

[அறுசீர் விருத்தம்]

      ‘அருண மாஞ்சினை கறித்துட னகன்பொழில்
                அலவலைக் குயில்கூவத்
      தருண வேனிலும் புகுந்தது தனுநெகத்
                தடமலர்ச் சரபுங்கம்
      கருண மூலமொ டுறநிறைந் திறைஞ்சினன்
                கறைமிடற் றிறைநாட்டக்
      கிரணந் தான்சுடக் கிரியிடைத் திருவுடம்
                பிழந்துழல் கிழவோனே’.

 எனவும் இவை நான்கடியும் எழுத்தொத்துக் குரு லகு ஒவ்வாது வந்த அளவழிச்சந்தம். பிறவும் வந்தவழிக் காண்க.

[அறுசீர் விருத்தம்]

      ‘அருங்கயம் விசும்பிற் பார்க்கும் அணிச்சிறு சிரலை அஞ்சி
      இருங்கயம் துறந்த திங்கள் இடங்கொண்டு கிடந்த நீலம்
      நெருங்கிய மணிவிற் காப்ப நீண்டுலாய்ப் பிறழ்வ செங்கேழ்க்
      கருங்கயல் அல்ல கண்ணே எனக்கரி போக்கி னாரே’.1

 இஃது எழுத்தும், குருவும், இலகுவும் ஒவ்வாது வந்த அளவழிச்சந்தம். பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க.

      இனி, தாண்டகம் வருமாறு:

[எண்சீர் விருத்தம்]

      ‘வானிலவி முகிலார்ப்ப மருவி மாண்பால்
           மயிலினமாய் வந்துலவச் சுரும்பு பாடத்


   1 சிந். 626.