பக்கம் எண் :
 

 ஒழிபு இயல்                                           515

      தேனுலவு நறுமுல்லை முறுவல் ஈனத்
           திசைதிசையிற் றேந்தளவம் சிறந்து பூப்பக்
      கானிலவு மலிகொன்றை கனக ஞாலக்
           கவினியவாய்ச் சார்ந்ததுகார் கலந்து கண்ணார்
      மானிலவு மடநோக்கின் நெடிய வாட்கண்
           வனமுலையாய்! மற்றுமனம் வருந்தல் நீயே’.

 இஃது இருபத்தேழெழுத்தடி அளவியற்றாண்டகம்.

[ஒன்பதின்சீர் விருத்தம்]

      ‘கருநிறப் பொறிமுகக் கடதடத் தமிழ்செவிக் கழைமருப்
           புறுவலிக் கவினுடைக் கரிகளைக் கனவரைக்கட்
      சுருணிறத் தெரியுளைச் சுரிமுகத் தொளியுகிர்ச் சுடரெயிற்
           றிடிகுரற் றுறுமயிர்த் துனிசினத்1 தரிசுழற்றும்’
      ‘இருளுடைச் சிறுநெறிக் கவலையுட் டனிவரற் கினிவரத்
           தகுவதன் றிரவினிற் பகலினிற் பெரிதுநன்றால்
      திருநிறப் புரிவளைச் சிறுநுதற் பெரியகட் சிகழிகைப்
           புனைகுழற் றுவரிதழ்த் திகழொளிக் கலையிவட்கே’

 இது முப்பத்தேழெழுத்தடி அளவியற்றாண்டகம்.

[பதினொருசீர் விருத்தம்]

      ‘அனவரதம் அமரர் அரிவையரொ டணுகி
           அகனமரும் உவகை யதுவிதியி னவர
           வணிதிகழ வருவர் ஒருபால்;
      கனவரையொ டிகலும் அகலமொளி கலவு
           கரகமல நிலவு கனகமுடி கவினு
           கழலரசர் துழனி ஒருபால்;
      தனவரத நளின சரணநனி பரவு
           தகவுடைய முனிகள் தரணிதொழ வழுவில்
           தருமநெறி மொழிவர் ஒருபால்;
      சினவரன பெருமை தெரியினிவை யவன
           திருவிரவு கிளவி தெனிருமொழி அளவு
           சிவபுரம தடைதல் திடனே’.

 இது நாற்பத்துமூன்றெழெழுத்தடி அளவியற்றாண்டகம்.


      பி - ம். 1 துணிசினத்