|
[பதினான்கு சீர் விருத்தம்]
‘அல்லற் கோடைக் கொல்லைத் தேவாய்
அலைகடலின் அமுதம் அளறுபட அணுகி
அணிபுணரி பருகி அரவலறி மறுக
அதிர்ந்தன கார்முகில்;
மல்லற் செல்வக் கொல்லைப் பாங்கே
மலிபிடவம் அலர வருதளவம் இளக
மயிலினமும் அகவ மதுரகமும் முரல
மகிழ்ந்தன மானினம்;
தொல்லைக் கைம்மாச் செம்மற் றிண்டேர்
துரகமொடு வயவர் அரவமிகு பரவை
தொலையவரன் அழிய நிலமைதுயர1 அடைய
இலங்கிய தோளினாய்!
எல்லைக் காலம் சொல்லிற் றீதாம்
எழுதுகொடி அனைய இடுகுமிடை ஒடிய
எழினிலவு கனகம் இனமணியொ டியைய
இணைந்தெழு கொங்கையாய்!
இது நாற்பத்தேழெழுத்தடி அளவியற்றாண்டகம்.
ஒழிந்த அளவியற்றாண்டகமும் வந்தவழிக் கண்டு கொள்க.
இனி அளவழித்தாண்டகத்திற் சில வருமாறு:
[எண்சீர் விருத்தம்]
‘மூவடிவி னாலிரண்டு சூழ்சுடரும் நாண
முழுதுலக மூடியெழில் முளைவயிர நாற்றித்
தூவடிவி னாலிலங்கு வெண்குடையி னீழற்
சுடரோய்! உன் அடிபோற்றிச் சொல்லுவதொன் றுண்டால்
சேவடிகள் தாமரையின் சேயிதழ்கள் தீண்டச்
சிவந்தனவோ? சேவடியின் செங்கதிர்கள் பாயப்
பூவடிவு கொண்டனவோ பொங்கொளிகள் சூழ்ந்து?
புலங்கொள்ளா வாலெமக்கெம் புண்ணியர்தம் கோவே!’1
இஃது எழுத்தும் இலகுவும் ஒவ்வாது வந்த அளவழித்தாண்டகம்.
பிறவும் அன்ன.
பி - ம். 1 நிலைமைதுயர். 1. சூளா துறவு 64; யா. வி. 25 உரைமேற்.
|