|
இது விடை.
[நேரிசை வெண்பா]
‘வெள்ளைக்குச் செப்பல் அகவற் ககவலே
துள்ளலே தூங்கல் கலிவஞ்சிக் குள்ளாகும்
தொன்னூற் புலவர் துணிவெனிற் பாவினமும்
சொன்னூற் புலவர் துணிபு.
இனி, செய்யுட்களுக்கு வருணம் முதலாயின சொல்லுமாறு:
[நேரிசை வெண்பா]
‘தெய்வம் துணையிராசி பக்கம் திணைபொழுது
பொய்யில் புகைவண்ணம் பூச்சாந்து - மையில்கோள்
நாற்கதி சாதி கிழமைதான் நன்கமையப்
பாற்படுக்க பானான்கின் டால்.’
‘வெண்பா முதலாக வேதியர் ஆதியா
மண்பால் வகுத்த வருணமாம்; - ஒண்பா
இனங்கட்கும் இவ்வாறே என்றுரைப்பர் தொன்னூல்
மனந்தட்பக் கற்றோர் மகிழ்ந்து.‘1
எனக் கொள்க.
‘வெண்பா முதலா நால்வகைப் பாவும்
எஞ்சா நாற்பால் வருணர்க் குரிய.’2
‘பாவினத் தியற்கையும் அதனோ ரற்றே.’3
சீரினும் தளையினும் சட்டக மரபினும்
பேரா மரபின பாட்டெனப் படுமே’.
‘அவைதிரி பாகின் விசாதி யாகும்.’
என்றார் வாய்ப்பியம் உடையார1 எனக் கொள்க.
இவற்றுக்கு நிறமும், திணையும், பூவும், சாந்தும், புகையும், பண்ணும்,
திறனும், இருதுவும், திங்களும், நாளும், பக்கமும், கிழமையும், பொழுதும்,
கோளும், இராசியும்,
1. யா. வி. 55, 95 உரை மேற். 2,3 யா. வி. 55 உரைமேற்.
பி - ம். 1 யாப்பியனூலுடையார்.
|