|
தெய்வமும், திசையும், மந்திரமும், மண்டிலமும், பொறியும், எழுத்து
முதலாகிய பண்பும் அறிந்து ஆராதிப்ப இவை யாவர்க்கும் கல்வியும்
புலமையுமாக்கி, நன்மை பயக்கும். இவை யெல்லாம் திணைநூலுட் கண்டு
கொள்க.
அவற்றுட் சில சொல்லுமாறு:1
[நேரிசை வெண்பா]
‘வெண்பா முதலாக வேதிய ராதியா
மண்பால் வகுத்த வருணமாம்; ஒண்பா
இனங்கட்கும் இவ்வாறே என்றுரைப்பர் தொன்னூல்
மனந்தட்பக் கற்றோர் மகிழ்ந்து.’
‘மீனாடு தண்டேறு வேதிய ராதியா
ஆனாத ஐந்தொன்பா னாயினவும் - தேனார்
விரைக்கமல வாண்முகத்தாய்! வெள்ளை முதலா
உரைத்தனவும் இவ்வாறே ஒட்டு.’1
‘ஆரல் மகமோ டனுடம் அவிட்டமென்
றீரிரண்டும் ஆதியா வெண்ணியநாள் - சீரிய
வெண்பா அகவல் கலிவஞ்சி என்றுரைத்தார்
எண்பா அறிவோர் எடுத்து.’
‘வேதியர்க்கு வெண்மை; வியன்செம்மை வேந்தர்க்கு
நீதிசால் பீதம் நிதிக்கிழவோர்க் - கோதிய
நீலமாம் ஏனை நிலமையோர்க் கக்குலத்தின்
பாலவாம் பாவிற்கும் அற்று.’
‘ஆரம் அரிசந் தனம்பழுப்போ டங்கலவை
பாரியனற் பாநான்கின் பாற்படுத்தார் - சீரிய
வெண்போது செங்கழுநீர் வேரிசேர் சண்பகத்தின்
வண்போது நீல மலர்.’
‘மகயிரம் ஆதியா வண்பூரங் காறும்
வகையின் மருட்பாவின் நாளாம் - தகாதென்ஞெண்
டோராசாந் தேரிரு சந்தச்சென் றொண்போது
தேரிற் பவளம் சிவப்பு.’
1. யா. வி. 95. உரைமேற்.
பி - ம். 1 வருமாறு.
|