|
[தரவு கொச்சகம்]
‘வேதவாய் மேன்மகனும் வேந்தன் மடமகளும்
நீதியாற் சேர நிகழ்ந்த நெடுங்குலம்போல்
ஆதிசால் பாவும் அரச வியன்பாவும்
ஓதியவா றொன்ற மருட்பாவாய் ஓங்கிற்றே.’1
[நேரிசை வெண்பா]
‘பாநாளாற் பாவோரை தாமொப்பப் பண்புணர்ந்த
மாநா வலர்வகுத்த வாய்மையாற் - பாநான்கின்
மூவிற் றினமும் மொழிப்புத்தேள் உண்மகிழப்
பாவித்துப் பாடப் படும்.’
‘பண்பாய்ந்த ஏழு பதினா றிழிபுயர்வா
வெண்பா அடிக்கெழுத்து வேண்டினார் - வெண்பாவின்
ஈற்றடிக் கைந்தாதி ஈரைந் தெழுத்தளவும்
பாற்படுத்தார் நூலோர் பயின்று.’2
‘முற்றுகரந் தானும் முதற்பாவின் ஈற்றடிப்பின்
நிற்றல் சிறுபான்மை நேர்ந்தமையால் - மற்ற
அடிமருங்கின் ஐயிரண்டோ டோரெழுத்து மாதல்
துடிமருங்கின் மெல்லியலாய்! சொல்லு.
[இதன் ஈற்றடி பதினோரெழுத்து]
‘பாலன் றனதுருவாய் ஏழுலகுண் டாலிலையின்
மேலன்று நீகிடந்தாய் மெய்யென்பர் - ஆலன்று
வேலைநீர் உள்ளதோ, விண்ணதோ, மண்ணதோ?
சோலைசூழ் குன்றெடுத்தாய்! சொல்லு.’3
‘எளிதின் இரண்டடியும் காண்பதற்கென் உள்ளம்
தெளியத் தெளிந்தொழியும் செய்வே - களியிற்
பொருந்தா தவனைப் பொரலுற் றரியாய்
இருந்தான் திருநாமம் எண்ணு.’4
இப் பொய்கையார் வாக்கினுள் முற்றியலுகரம் ஈறாய் வந்தன. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க.
1. யா. வி. 55. உரைமேற். 2.3 யா. வி. 62. உரைமேற்.
3,4 திவ். இயற்பா. மு.தி. 69,51; பி-ம். 1 யா.வி. 57. உரைமேற்.
|