|
[நேரிசை வெண்பா]
‘முல்லை குறிஞ்சி மருதத்தின் பின்னெய்தல்
எல்லையில் பாக்கட் கியற்றிணையாம்;- முல்லை
குறிஞ்சி யெனவிரண்டு குன்றா மருட்கென்
றறைந்தார் வியன்புலவோர் ஆய்ந்து.’
எனவும்,
‘முல்லை அந்தணன்; குறிஞ்சி அரசன்;
மல்லல் மருதம் வாணிகன் என்ப;
நெய்தல் சூத்திரன்; நினையுங் காலைப்
பல்குலம் என்ப பாலை யானே.’
எனவும்,
[நேரிசை வெண்பா]
‘பண்ணும் திறமும்போல் பாவும் இனமுமாம்
வண்ண விகற்ப வகைமையால் - பண்மேல்
திறம்விளரிக் கில்லதுபோல் செப்பல் அகவல்
இசை மருட்கும் இல்லை இனம்.’1
எனவும்,
‘பாடப் படுவோர்க்கும் பாடு மவன்றனக்கும்
நாடப் படுநயங்கள் நாடாதே - பாடுமேற்
காகப்புட் சேரக் கனிபனையின் வீழ்வதுபோல்
ஆகித்தற் சேரும் அலர்.’
எனவும்,
‘நாற்பா நடைதெரிந்த நன்னூற் பெரும்புலவர்
நூற்பா நயந்த நுழைபொருளைப் - பாச்சார்த்திப்
பாவித்துப் பார்மேல் நடாத்தப் படருமே
நாவித் தகத்து நகம்.’
எனவும்,
[கலி விருத்தம்]
‘புலந்துறை போகிய நலவர் நாவினுட்
கலந்துறை கலைமகள் கவிதை கந்தமா
1 யா. வி. 55, 56 உரைமேற்.
|