பக்கம் எண் :
 

 ஒழிபு இயல்                                           523

      நிலந்தொழப் புறப்படும் நிலையள் ஆகுமிவ்
      விலங்கிழை பெருமையை எண்ண வேண்டுமோ!’

 எனவும்.

[கட்டளைக் கலித்துறை]

      ‘உள்ளப் பரவையி னூல்வரை நாட்டியொண் கேள்விதம்பா
      எள்ளப் படாமை இயையக் கடையின் இசைபெருக்கும்
      வள்ளற் குணநாவர் வானோர் களைவள மைப்படுக்கும்
      வெள்ளைக் கவிதை அமிழ்தமெல் லார்க்கும் வெளிப்படுமே’.

      ‘அகமுத லாய பொருள்கவிக் காவி அணிதழைப்பத்
      தகமுத லோர்சொற்ற பாவின சட்டகக் கட்டுரையே
      நிகழ்தரும் ஓசை இயனடை யானொடு நீர்வரைப்பிற்
      புகழ்தரு வாய்மைப் பயன்வியன் சீர்த்திப்புத் தேளுலகே.’

 எனவும் இவற்றை விரித்து உரைத்துக்கொள்க.

      அறம் பொருள் இன்பம் வீடு பேறு ஆமாறு சொன்ன நூல்களுள்ளும், அவை சார்பாக வந்த சோதிடமும், சொகினமும் வக்கின கிரந்தமும், மந்திரவாதமும், மருத்துவநூலும், சாமுத்திரியமும், நினலத்து நூலும், ஆயுதநூலும், பத்து விச்சையும், ஆடைநூலும், அணிகலநூலும், அருங்கலநூலும் முதலாயவற்றுள்ள மறைப்பொருள் உபதேசமும், வல்லாராயும் கவிப் பெருமையும், சாவவும் கெடவும் பாடுமாறும் மனத்தது பாடுமாறும், பாடப்படுவோர்க்கு வரும் நன்மையும் தீமையும் அறியுமாறும் வல்லார்வாய்க் கேட்டு உணர்ந்து கொள்க. ஈண்டு உரைப்பிற் பெருகும்.

      இனிப் பாவினங்களுட் சமக்கிரதமும் வேற்றுப்பாடையும் விரவி வந்தால், அவற்றையும் அலகிட்டுப் பாச்சார்த்தி வழங்கப்படும். அவை குறுவேட்டுவச் செய்யுளும், உலோகவிலாசனியும், பெருவளநல்லூர்ப் பாசாண்டமும் முதலாக உடையன எனக் கொள்க.

[நேரிசை வெண்பா]

      ‘செந்தமிழ்ச் செய்யுட் டெரிந்துணர்ந்து செந்தமிழ்க்கண்
      வந்த வடமொழியை மாற்றாதே - சந்தம்
      வழுவாமற் கொண்டியற்று மாண்பினார்க் குண்டோ
      தழுவாது நிற்குந் தமிழ்?’


  1 யா. வி. 55, 56 உரைமேற்.