|
பாக்கட்கு ஓசை பிறக்குமாறு உரைத்துக் கொள்க. அவை சொல்லுமாறு:
[குறள் வெண்பா]
‘வெண்சீரிற் செப்பல் பிறக்கும்; விகற்பத்துப்
பண்பாய்ந்த துள்ளல் படும்.’
‘இயற்சீருள் தோன்றும் அகவல்; அவற்றின்
விகற்பத்து வெள்ளோசை யாம்.’
‘தன்சீருள் தூங்கல் கலியடியின் கண்டக்கால்
வஞ்சிக் கிசையாய் வரும்.’
‘மயங்கி வருவனவும் வல்லோர் வகுப்ப
மயங்காமற் கொண்டுணரற் பாற்று.’
என இவற்றை விரித்து உரைத்துக்கொள்க.
[நேரிசை வெண்பா]
‘தலைவன் தலைமுதலாத் தார்வேந்தன் காறும்
மலைமுதலா மாநாய்கன் மாதே! - நிலமுழுதும்
மன்னர்கோ னாளு மறைமுதலா வஞ்சிக்கோன்
தன்முதலோர்த் தந்தானும் தான்.’
‘ஈரிரண்டும் ஏழெழுத்தும் ஈரைந்தும் மூவைந்தும்
பாரியன்ற நாற்சீர் பதினெட்டும் - ஏர்பாய்
விளையும் பதினேழ் நிலத்துக் குறள்சிந்
தளவு நெடில்கழியோ டைந்து.’
‘ஐந்தும் அகவற்கு வெள்ளைக் களவடியும்
சிந்து நெடிலடிக்கட் டொல்லிரண்டும் - வந்த
தளவிரண்டும் ஆன்ற நெடில்கழியும் ஒண்பாற்
றளைசிதைவில் தண்டாக் கலிக்கு.’1
‘ஈரிரைண்டோ டீரா றெழுவாய் இறுவாயாச்
சேரும் எழுத்திருசீர் வஞ்சிக்காம்;- ஓரும்
நெடிலடிக்கு நேர்ந்தனவும் மூவொருசீர் வஞ்சிக்
கடிவகுத்தார் எட்டாதி ஆய்ந்து.’2
1. யா. வி. 25. உரைமேற். 2. யா. வி. 25, 90 உரைமேற்.
|