பக்கம் எண் :
 

 550                                   யாப்பருங்கல விருத்தி

[தரவு கொச்சகம்]

     ‘பரவு பொழுதெல்லாம் பன்மணிப்பூட் டோவா                 (13)
     வரவும் இனிக்காணும் வண்ணநாம் பெற்றேம்                  (12)
     விரவு மலர்ப்பிண்டி விண்ணோர் பெருமான்                   (12)
     இரவும் பகலும்வந் தென்றலைமே லானே.’                    (13)

     இது முதலடியும் ஈற்றடியும் எழுத்து மிக்கு, நடு இரண்டடியும் எழுத்துக் குறைந்து, நாலடியும் சீர் ஒத்து வந்தமையால், பிபீலிகா மத்திமம்.

     என்னை?

[குறள் வெண்பா]

     ‘இடைக்கண் இரண்டடியும் மிக்கால் யவமாம்;
     எறுப்பிடையாம் குன்றின் எழுத்து.’

 என்பவாகலின்.

[கலிவிருத்தம்]

     ‘திருவிற்கொர் கற்பகத் தெரியன் மாலையார்                   (13)
     உருவிற்கு விளக்கமாம் ஒண்பொற் பூங்கொடி                  (13)
     முருகற்கும் அனங்கற்கும் எனக்கும் மொய்சடை                (14)
     ஒருவற்கும் பகைத்தியால் ஒருத்தி வண்ணமே.’                 (14)

     இது முதலிரண்டடியும் எழுத்துக் குறைந்து, கடையிரண்டடியும் எழுத்து மிக்கு, நான்கடியும் சீர் ஒத்து வந்தமையால், பாதிச் சம விருத்தம்.

[வஞ்சித் துறை]

     ‘மடப்பிடியை மதவேழம்                                   (9)
     தடக்கையால் வெயின்மறைக்கும்                             (9)
     இடைச்சுரம் இறந்தார்க்கே                                  (8)
     நடக்குமென் மனனேகாண்.’1                                (8)

     ‘இரும்பிடியை இகல்வேழம்                                 (9)
     பெருங்கையால் வெயின்மறைக்கும்                           (9)
     அருஞ்சுரம் இறந்தார்க்கே                                  (8)
     விரும்புமென் மனனேகாண்.’2                               (8)


  2. யா. வி. 91 உரை மேற்.