|
இனி, சிறப்புடைப் பையுட் சந்தங்களிற் சில வருமாறு:
[அறுசீர் விருத்தம்]
‘ஆதியான் அருளாழி தாங்கினான் ஆயிரவெங் கதிரோன் நாணும் (19)
சோதியான் சுரர்வணங்கும் திருவடியான் சுடுநீற்றான் நினையப் பட்ட(22)
காதியான் அருளிய கதிர்முடி கவித்தாண்டான் மருகன் கண்டாய் (20)
ஓதியான் உரைப்பினும் இவன்வலிக்கு நிகராவார் உளரோ வேந்தர்.’1(20)
இது முதலடி பத்தொன்பது எழுத்தாயும், இரண்டாமடி இருபத் திரண்டு எழுத்தாயும், மூன்றாமடி இருபது எழுத்தாயும், நான்காம் அடி இருபத்தோரெழுத்தாயும் வந்தமையால், அளவழிப் பையுட்சந்தம்.
[கலி விருத்தம்]
‘மணிமலர்ந் துமிழ்தரும் ஒளியும் சந்தனத் (14)
துணிமலர்ந் துமிழ்தரும் தண்மைத் தோற்றமும் (13)
அணிமலர் நாற்றமும் என்ன அன்னவால் (12)
அணிவரு சிவகதி அடைவ தின்பமே.’2 (14)
இது முதலடியும் முடிவடியும் பதினாலெழுத்தாய், இடையடி இரண்டும்
பதின்மூன்றும் பன்னிரண்டுமாய், எழுத்து ஒவ்வாது வந்தமை யால்,
அளவழிப் பையுட்சந்தம் இதனை எறுப்பிடைச் சந்தச் செய்யுள் என்பாரும்
உளர்.
[அறுசீர் விருத்தம்]
‘செஞ்சுடர்க் கடவுட் டிண்டேர் இவுளிகால் திவள வூன்றும் (17)
மஞ்சுடை மகர்1 நெற்றி வானுரு வாயில் மாடத் (15)
தஞ்சுடர் இஞ்சி ஆங்கோர் அகழணிந் தலர்ந்த தோற்றம் (16)
வெஞ்சுடர் விரியும் முந்நீர் வேதிகை மீதிட் டன்றே.’3 (15)
1. சூளா. சுயம். 25. 2. சூளா. முத்தி. 6. 3. சூளா. நகரப்.
3. சூளா. சீய. 107.
பி - ம். 1 மதர்வை.
|