பக்கம் எண் :
 

 ஒழிபு இயல்                                           553

 இதுவும் முதலடி பதினேழெழுத்தாய், இரண்டாமடியும், நான்கா மடியும் பதினைந்தெழுத்தாய், மூன்றாமடி பதினாறெழுத்தாய் வந்தமை யால், அளவழிப் பையுட் சந்தம். இதனைப் பாதிச் சமப் பையுட்சந்தம் என்பாரும் உளர்.

[அறுசீர் விருத்தம்]

     ‘என்னிது விளைந்த வாறித் தூதுவர் யாவர் என்று              (15)
     கன்னவில் வயிரத் திண்டோட் கடல்வண்ணன் வினவ யாரும்     (17)
     சொன்னவின் றுரைக்க மாட்டார் துட்கென்று துளங்க ஆங்கோர்   (16)
     கொன்னவில் பூதம் போலும் குறண்மகள்1 இதனைச் சொன்னாள்.’1 (16)

     இது முதலடி பதினைந்தெழுத்தாய், இரண்டாமடி பதினேழெழுத் தாய், பின் இரண்டடியும் பதினாறெழுத்தாய் வந்தமையால், அளவழிச் சந்தப் பையுள்.

     பிறவும் இவ்வாறு வருவனவற்றை எல்லாம் வந்த வகையாற் பெயர் கொடுத்து வழங்குக.

     என்னை?

     ‘வந்த முறையாற் பெயர்கொடுத் தெல்லாம்
     தந்தம் முறையாற் றழாஅல் வேண்டும்.’

     என்பது இலக்கணமாகலின்.

 தாண்டகமும் இவ்வாறே கொள்க.

     ‘ஒன்றென முடித்தலென்
     றின்ன வகையால் யாவையும் முடியும்.’

 என்பவாகலின்.

     ‘குமரசேனாசிரியர் கோவையும், தமிழ் முத்தரையர் கோவையும், யாப்பருங்கலக் காரிகையும் போன்ற சந்தத்தால் வருவனவற்றின் முதற்கண் நிரையசை வரின், ஓரடி பதினேழெழுத்தாம்; முதற்கண் நேரிசை வரின் ஓரடி


  1. சூளா. சீய. 107.
 பி - ம். 1 குறமகள்.