பக்கம் எண் :
 

 554                                   யாப்பருங்கல விருத்தி

 பதினாறெழுத்தாம். இவ்வாறன்றி மிக்கும் குறைந்தும் வாரா. அவை எண்ணுகின்றுழி ஆய்தமும் ஒற்றும் ஒழித்து, உயிரும் உயிர் மெய்யும் குற்றியலிகரமும் குற்றியலுகரமும் கொண்டு எண்ணப்படும். என்னை?

[நேரிசை வெண்பா]

     ‘எழுவாய் நிரைவரினாம் ஏழுடைய ஈரைந்
     தெழுவாய் தனிவரினொன் றெஞ்சும் - வழுவாத
     கோவையும் செய்யுட்கால் குன்றா பெருகாவென்
     றேவினார் தொல்லோர் எழுத்து.’1

 என்பவாகலின்.

     அவற்றுட் சில வருமாறு:

[கட்டளைக் கலித்துறை]

     நடுஞ்‘இருெசெஞ்சுடர் எஃகமொன் றேந்தி இரவின்வந்த
     அருநெடுங் காதற்கன் றேதரற் பாலதல் லாதுவிட்டாற்
     கருநெடு மால்கடல் ஏந்திய கோன்கயல் சூடுநெற்றிப்
     பெருநெடுங் குன்றம் விலையோ கருதிலெம் பெண்கொடிக்கே!’1

 எனவும்,

     ‘காய்ந்துவிண் டார்நையக் காமரு கூடலிற் கண்சிவந்த
     வேந்துகண் டாயென்று வெள்வளை சோரக் கலைநெகிழப்
     போந்துகண் டாரொடும் போந்துகண் டேற்கவன் பொன்முடிமேற்
     போந்துகண் டாளென்று போந்ததென் மாட்டோர் புறனுரையே.’2

 எனவும்,

     ‘திண்டேர் வயவரைச் சேர்வைவென் றானன்ன தேங்கவுண்மா
     வண்போ தமன்ற வழைநிழல் நீக்கிய வார்சிலம்ப!
     நண்போ நினையிற்பொல் லாதது; நிற்கஎன் னன்னுதலாள்
     கண்போல குவளை கொணர்ந்ததற் கியாதுங்கைம் மாறிலமே!3


  1. யா. வி. 15 உரை மேற். 2. யா. வி. 53 உரைமேற். 3. யா. வி. 96. உரைமேற்.
 பி - ம். * எடுத்து