|
‘வென்றான் வினையின் தொகையா யவிரிந்து தன்கண்
ஒன்றாய்ப் பரந்த உணர்வின் ஒழியாது முற்றும்
சென்றான் திகழும் சுடர்சூழ் ஒளிமூர்த்தி யாகி
நின்றான் அடிக்கீழ்ப் பணிந்தார் வினைநீங்கி நின்றார்.’1
எனவும்,
‘முன்றான் பெருமைக் கணின்றான் முடிவெய்து காறும்
நன்றே நினைந்தான் குணமே மொழிந்தான்ற னக்கென்
றொன்றா னுமுள்ளான் பிறர்க்கே உறுதிக்கு ழந்தான்
அன்றே இறைவன்? அவன்றாள் சரணாங்கள் அன்றே.’2
எனவும்,
‘நல்லார் வணங்கப் படுவான் பிறப்பாதி நான்கும்
இல்லான் உயிர்கட் கிடர்தீர்த் துயிரின்பம் எய்தும்
சொல்லான் தருமச் சுடரோன் எனுந்தொன்மை யானான்
எல்லாம் உணர்ந்தான் அவனே இறையாக ஏத்தி.’3
எனவும்,
‘குற்றங்கள் மூன்றும் இலனாய்க் குணங்கட் கிடனாய்‘4
எனவும் இவை நேரசை முதலாய் வந்து, ஓரடி பதினான்கெழுத்து ஆனவாறு
கண்டு கொள்க.
‘மதியம் கெடுத்த வயமீன் எனத்தம்பி மாழாந்
துதிதற் குரியாள் பணியால் உடனாய வாறும்
நிதியின் னெறியின் அவன்றோ ழர்நிரந்த வாறும்
பதியின் அகன்று பயந்தா ளைப்பணிந்த வாறும்.’5
என நிரையசை முதலாய் வந்து, பதினைந்தெழுத்து ஓரடிக்கண் வந்தவாறு
கண்டு கொள்க.
[சந்தக் கலி விருத்தம்]
‘அம்பொன்மாலை யார்க ளித்த லத்தெ ழுந்த ரத்தவாய்க்
கொம்ப னார்கொ டுத்த முத்த நீர வாய கோழரைப்
பைம்பொன் வாழை செம்பொனிற்ப ழுத்து வீழ்ந்த சோதியால்
அம்பு பாய்ந்து வந்தொ சிந்து சாறு சோர்வ போலுமே.’6
1. சூளா. காப்பு; யா. வி. 24 உரை மேற். 2. குண்டல. கட. வாழ். 3.
நீலகேசி. கட. வாழ். 4. இஃது அமிர்தபதி என்னும் நூலின் முதற்செய்யுள்
என்றூகிக்க இடமுண்டு. 5. சிந். பதிகம். 18. 6. சூளா. இரத. நூ. 13
|