பக்கம் எண் :
 

 ஒழிபு இயல்                                           557

     இந்தச் சந்தத்தால் நேரசை முதலாக வருவன ஒரே அடியுள் பதினைந்தெழுத்தாயும், நிரையசை முதலாய் வருவன பதினா றெழுத்தாயும் வருதல் பெரும்பான்மைய எனக் கொள்க.

     ‘கவர் கதிர்வ ரஃகி றுங்கு காய்க வின்ற எட்குழாம்
     துவரைகொட்ப யறுழுந்து தோரை யோடு சூழ்கொடி
     அவரையின்ன பல்லு ணாவ ளக்கரிய என்பவாற்
     கவரும் வண்டு சூழ நின்று காந்தள்கை மறித்தவே.’

     இது நிரையசை முதலாய்ப் பதினாறெழுத்தாயினவாறு கண்டுகொள்க.

     ‘மாசில் கண்ணி மைந்த ரோடு மங்கை மார்தி ளைத்தலிற்
     பூசு சாந்த ழித்தி ழிந்து புள்ளிவேர்பு லர்த்தலால்
     வாச முண்ட மாருதம்வண்டு பாட மாடவாய்
     வீசி வெள்ளி லோத்தி ரப்பொ தும்பு பாய்ந்து விம்முமே.’1

     இஃது இச்சந்தத்தால் வந்து, மூன்றாமடி எழுத்துக் குறைந்து வந்தது.

     ‘தெய்வ நாறு காந்தளஞ் சிலம்பு தேங்கொள் பூம்பொழில்
     பவ்வ முத்த வார்மணற் பறம்பு மௌவல் மண்டபம்
     எவ்வ மாடு நீர்ப்பொழில் இடங்க ளின்ப மாக்கலாற்
     கவ்வை யாவ தந்நகர்க் காம னார்செய் கவ்வையே.’2

     இதுவும் சந்தத்தால் வந்து, ஈற்றடி பதினான்கெழுத்தாய் வந்தது.

     இவ்வாறு எழுத்துக் குறைந்தும் மிக்கும் வருவனவற்றை அறிந்து, ‘நிசாத்றும், ‘விராட்டு’ என்றும், ‘புரிக்கு’ என்றும், ‘சுராட்டு’ என்றும் பெயரிட்டு வழங்குக.

     நான்கடியும் எழுத்து ஒத்து வருவனவற்றைத் ‘தலையாகு சந்தம்’ என்றும், ஓரெழுத்து மிக்கும் குறைந்தும் வருவனவற்றை ‘இடையாகு சந்தம்’ என்றும், இரண்டெழுத்து மிக்கும் குறைந்தும் வருவனவற்றையும் பிறவாற்றான் மிக்கும் குறைந்தும் வருவனவற்றையும் ‘கடையாகு சந்தம்’ என்றும் வழங்குவர் ஒருசார் ஆசிரியர். தாண்டகங்கட்கும் இவ்வாறே சொல்லுவர்.


  1. சூளா. இரத. நூ. 16 2. சூளா. இரத நூ. 18.