|
[வஞ்சித் துறை]
‘கற்ற நூவினார்
செற்றம் நீக்கினார்
வெற்றி வேந்தருக்
குற்ற தூதரே.’
எனவும் இவை குருவும் இலகுவும் அடி முடியளவும் முறையே வந்தமையால்,
சமானம்.
[கலி விருத்தம்]
‘காரார் தோகைக் கண்ணார் சாயற்
றேரார் அல்குல் தேனார் தீஞ்சொல்
போரார் வேற்கட் பொன்னே! இன்னே
வாரார் அல்லர் போனார் தாமே.’
இது முற்றக் குருவே வந்தமையால், ‘சமானம்’ எனப்படும்.
[வஞ்சித் துறை]
‘முருகு விரிகமலம்
மருவு சினவரன
திருவ டிகடொழுமின்
அருகு மலமகல.’
இது முற்ற இலகுவே வந்தமையால், ‘சமானம்’ எனப்படும்.
[வஞ்சி விருத்தம்]
‘கயற்க ருங்கண் அந்நலார்
முயக்கம் நீக்கி மொய்ம்மலர்
புயற்பு ரிந்த புண்ணியர்க்
கியற்று மின்கள் ஈரமே.’
இது இலகுவும் குருவும் முறையே வந்தமையால் ‘பிரமாணச் செய்யுள்’
எனப்படும்.
[கலி விருத்தம்]
‘துங்கக் கனகச் சோதி வளாகத்
தங்கப் பெருநூல் ஆதியை ஆளும்
|