|
செங்கட் சினவேள் சேவடி சேர்வார்
தங்கட் கமரும் தண்கடல் நாடே.’
இஃது இரண்டு குருவும் இரண்டு இலகுவுமாய் முறையானே
வந்தமையால், ‘விதானச் செய்யுள்’ எனப்படும்.
[வஞ்சித் துறை]
‘பொருளாளிற் புகழாமென்
றருளாளர்க் குரையாயுந்
திருமார்பிற் சினனேயொன்
றருளாய்நின் அடியேற்கே.’
இஃது இரண்டு குருவும் இரண்டு இலகுவுமாய் முறையானே
வந்தமையால், ‘விதானச் செய்யுள்’ எனப்படும்.
[வஞ்சி விருத்தம்]
‘பூவார் பொய்கைப் பொற்போதில்
தேவார் செங்கட் சேயாநீ
யாவா வென்னா தென்னோசூர்
மாவா னானைக் கொன்றானே!’
இது முற்றக் குருவே வந்தமையால், சமானம்.
பிறவும் அன்ன. இவையெல்லாம் ‘பிறவும், என்றதனாற் கொள்க.
செய்யுள் ஓத்துக் கரணம்
முற்றும்
(96) சித்திரக்கவி மாலை
மாலை மாற்றே, சக்கரம், சுழிகுளம்,
ஏக பாதம், எழுகூற் றிருக்கை,
காதை கரப்பே, கரந்துறை பாட்டே,
தூசம் கொளலே, வாவ னாற்றி,
கூட சதுர்த்தம்,1 கோமூத் திரியே.
ஓரெழுத் தினத்தால்2 உயர்ந்த பாட்டே.
பி - ம். 1 சதுக்கம். 2 ஓரினத் தெழுத்தால்.
|